விஜய்க்கு இப்படியா சோதனை வரனும்! பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள்.. குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய்
சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த உள்ளன. ஏப்.20ம் தேதி மொத்த தமிழ்நாடும் அரசியல் களத்தில் சூடாக இருக்கும். ஆனால், விஜய்யின் மனைவி சங்கீதா கொடுத்த புகார் தொடர்பான விசாரணைக்கு அவர், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பார் என்று சொல்லப்படுகிறது.
இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், விஜய் டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். அரசியல் தலைவர்கள் தேர்தல் தேதியை எதிர்பார்த்து களத்தில் இருந்தனர். ஆனால், விஜய் மட்டும்தான் டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார். இப்படி இருக்கையில், பிரச்சாரத்தின்போதும் விஜய் இருக்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது.

விஜய்யின் அரசியல் பயணம்
திராவிட கட்சிகளுக்கு எதிராக விஜய் தீவிரமாக களமாடி வருகிறார். தனது அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் கூறி வரும் விஜய், இதுவரை பாஜகவை கடுமையாக விமர்சிக்கவில்லை. இப்படியாக திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த அவர், கரூர் நெரிசல் வழக்கில் சிக்கியிருக்கிறார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டதே விஜய்தான்! ஆனால், விசாரணைக்காக கடைசியில் விஜய்தான் அலையவிடப்பட்டு வருகிறார். இதற்கிடையில் விஜய் மீதான விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வருகிறது.
கள்ளத்தொடர்பு விஷயத்தில் சிக்கிய விஜய்
விஜய் திருமணத்தை மீறி, ஒரு நடிகையுடன் உறவில் இருக்கிறார் என்றும், எனவே அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் எனவும் அவரது மனைவி சங்கீதா குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவில் விஜய் தன்னை துன்புறுத்துவதாகவும், நடிகையுடன் இருக்கும் உறவு குறித்து கேட்டால் பொருளாதார ரீதியாக தன்னை தனிமைப்படுத்துவதாகவும் தெரிவிதிருந்தார். மட்டுமல்லாது போதை பழக்கத்திற்கு அடிமையாகியிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.
விஜய்க்கு பின்னடைவு
இது விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பின்னடைவு குறித்து விஜய் இதுவரை வாய் திறக்கவில்லை. இப்படி இருக்கையில் தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பாஜகவுடன் கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி ஒன்று நடந்தால், அது விஜய்க்கு மிகப்பெரிய பேக் ஃபயரை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
பிரச்சாரத்தில் தலைவர்கள்.. நீதிமன்றத்தில் விஜய்
இந்த பஞ்சாயத்துகளுக்கு இடையில்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்.23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். ஏப்.20,21ம் தேதிகளில் தலைவர்கள் தீயாக பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில்தான் விஜய்யின் விவாகரத்து வழக்கு, குடும்பல நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. எனவே அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தில் இருக்கும்போது, விஜய் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பார் என்று பேசப்பட்டு வருகிறது. அப்படி மட்டும் நடந்தால் விஜய்யின் ரசிகர்கள் டென்ஷன் ஆகிவிடுவார்கள்.
ஆனால், தனது வழக்கறிஞர் மூலம் விஜய், விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கோர வாய்ப்புள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
விஜயை பார்க்க.. சாக்கடையில் 3 கிமீ நீச்சலடித்து சென்ற தவெக தொண்டர்.. கடைசியில் ஏமாந்துட்டாரே -
வருமான வரியை மறைத்ததாக வழக்கு!ரூ 1.50 கோடி அபராதத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போன விஜய் -
நேர்ல வரலனாலும் நேராகவே பேசுறாரே! ஹாலோகிராமில் கும்பகோணத்தை அதிரவைத்த AI விஜய் -
கன்னியாகுமரியில் விஜய் ஓட்டிய சைக்கிள்… விலை இவ்வளவு தானா? அதை வாங்கும் போது நடந்த சம்பவம் -
கரூரில் நெய்வேலி ரூட்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்ஸ்டா பேஜை பார்த்தீங்களா? புதுசா இருக்கே! "மாஸ்டர்.."! -
Vijay: ஒரு நாள் பிரச்சாரம்! அடுத்த நாள் ரெஸ்ட்! தவெகவுக்கே ஓட்டு கேட்காத விஜய்! காங்கிரஸ் தப்பியது! -
10 நாள்தான் டைம்! வீடு வீடாக போய் ஓட்டு கேளுங்க! நீலாங்கரை வீட்டுக்குள் இருந்தபடியே விஜய் அறிவுரை -
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெல்வாரா? வெறும் 20 பேர்தானாமே! குஷியில் இனிகோ இருதயராஜ்! -
ஆதார் கார்டு போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவலன்ஞ் கார்டு வழங்கப்படும்.. குமரியில் விஜய் பேச்சு -
ஜனநாயகன் படம் லீக்.. 'அவர்' ஒருவரை தவிர அனைவரும் கண்டிப்பு -
இனிகோவுக்கு WFH தெரியாது.. உங்க வீட்டுக்கே வருவாரு.. விஜய் தொகுதியில் இறங்கி அடித்த உதயநிதி -
ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விஷக்கிருமிகள்.. அடித்து சொன்ன அண்ணாமலை.. சிபிஐ வராங்களாமே












Click it and Unblock the Notifications