"விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி.." வெளியான புதிய சர்வே! திருச்சியில் தான் பெரிய ட்விஸ்ட் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் விஜய் களம் காண்கிறார். இதற்கிடையே விஜயக்கு இரு தொகுதிகளில் ஒன்றில் அதிர்ச்சி காத்திருப்பதாகத் தந்தி டிவி சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு தொகுதிகளைத் தவிர வேறு எந்தவொரு தொகுதியிலும் தவெக வெல்ல வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் 'ஒன் மேன் ஆர்மி'யாக வலம் வந்த விஜய், அரசியலிலும் தனத்து போட்டியிட்டுள்ளார். அவர் முதலில் தவெக தலைமையில் ஒரு கூட்டணியை அமைக்கவே முயன்றார். இருப்பினும், மற்ற கட்சிகள் தயக்கம் காட்டியதால் தவெக தனித்துப் போட்டியிடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் 'தனித்து போட்டி' என்று தவெக களமிறங்கியுள்ளது.

Vijay TVK Perambur Vote Share

விஜய்

இந்த தேர்தலில் தவெக தலைவரான விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் குறைந்தபட்சம் "இரண்டுமே நமக்கு தான்" எனத் தவெகவினர் கொண்டாட்டத்தில் இருந்தனர். ஆனால், தந்தி டிவியின் சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் அதையும் கூட யோசிக்க வைத்திருக்கின்றன.

பெரம்பூர்

சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு ஓரளவு சாதகமான சூழலே நிலவுகிறது. தந்தி டிவி கருத்துக் கணிப்பின்படி, தவெக 39% - 45% வாக்கு விகிதத்துடன் முன்னிலையில் இருக்கிறது. ஆளும் கட்சியான திமுக 33% - 39% வரை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக 14 முதல் 20% மட்டுமே வாக்குகளைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாதக 1 முதல் 6% வாக்குகளையும் இதர கட்சிகள் 1 முதல் 5% வாக்குகளையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு விஜய் வெற்றிக் கோட்டைத் தொட அதிக வாய்ப்புகள் இருப்பதாக சர்வே காட்டுகிறது.

திருச்சி கிழக்கு

ஆனால், நிஜமான அதிர்ச்சி திருச்சியில் தான் எனச் சொல்லலாம். பாரம்பரியமாக திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படும் திருச்சி கிழக்கில், விஜய் 32% - 38% வாக்குகளைப் பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் திமுக வேட்பாளர் இந்த தொகுதியில் 31% முதல் 37% வாக்குகளைப் பெற்று கடும் போட்டியைக் கொடுப்பாராம்.

இடைவெளி வெறும் ஒரே ஒரு சதவீதமாக மட்டுமே இருப்பதால் வெற்றி உறுதி எனச் சொல்லிவிட முடியாது.. அரசியலில் எப்போது வேண்டுமானாலும் கவிழக்கூடிய மெல்லிய நூலாகவே இந்த ஒரு சதவிகிதம் இருக்கிறது.. திமுகவின் தேர்தல் இயந்திரம் இந்த ஒரு சதவீதத்தை எளிதில் முறியடிக்கக் கூடியது என்பதை உணர்ந்தே, அங்கே விஜய்யும் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதிர்ச்சி

இதன் காரணமாகவே விஜய் திருச்சி கிழக்கு தொகுதிக்குக் கூடுதல் கவனத்தைச் செலுத்தி வருகிறார். நேற்றைய தினம் மும்மத வழிபாட்டுத் தலங்களுக்கும் நேரடியாகச் சென்று வழிபாடு கூடச் செய்திருந்தார். கடைசி நேர 'பூத் மேனேஜ்மென்ட்' பணிகளில் விஜய் தரப்பு கவனம் செலுத்தவுள்ளது. சினிமாவில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் ஒற்றை ஆளாக எதிரிகளை வீழ்த்துவது எளிது. ஆனால், நிஜ அரசியல் களத்தில் ஒரு சதவீத வாக்கு வித்தியாசம் என்பது கத்தி மீது நடப்பது போன்றது.

மேலும், இரு தொகுதிகளைத் தவிர வேறு எந்தவொரு தொகுதியிலும் தவெக வெல்ல வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் என இரண்டாம் கட்ட தலைவர்கள் யாருக்கும் வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+