நாகப்பட்டினத்தில் நாளை விஜய் பிரச்சாரம்! மின்தடை செய்ய தவெக மனு
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை நாகையில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள நிலையில் மின்சார விநியோகத்தை நிறுத்த வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை (செப்டம்பர் 20) நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

நாகை மாவட்டத்தில் விஜய் நாளை பரப்புரை செய்ய திட்டமிடப்பட்டிருந்த இடம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே நாகையில் புத்தூர் ரவுண்டானா பகுதியில் பரப்புரை செய்ய திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் பாதுகாப்பு காரணமாக அந்த இடத்தில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதற்கு பதிலாக அண்ணா சிலை பகுதியில் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதியம் 12 :30 மணிக்கு புத்தூர் அண்ணா சிலை பகுதியில் விஜய் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதித்துள்ளது. மேலும் 30 நிமிடங்களில் விஜய்யின் உரையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேசமயம் விஜய்யின் வாகனத்தை யாரும் பின் தொடரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருவாரூரிலும் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில் நாளை நாகையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை பயணம் செல்லும் வழியில் ஏராளமானோர் கூடுவர் என்பதால் பாதுகாப்பு கருதி, மின்சாரத்தை நிறுத்தம் செய்ய அக்கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் மின்வாரியத்தில் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், விஜய் சாலை மார்க்கமாக புத்தூர் அண்ணாசிலை அருகில் மக்களை சந்தித்து உரையாற்ற உள்ளார். அப்பகுதிகளில் உயர் மின்னழுத்த கம்பி உள்ளதால் விஜய்யின் நிகழ்வு தொடங்கி முடியும் வரை அவ்வழியில் உள்ள வழி தடங்களில் மின் நிறுத்தம் செய்து தரும்படியும் அல்லது மின் ஊழியர்களை நியமித்து பொதுமக்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 13 ஆம் தேதி முதல் மக்களை சந்திக்கும் பிரச்சாரத்தை திருச்சியில் விஜய் தொடங்கியிருந்தார். அன்றைய தினம் விமான நிலையத்தில் இருந்து திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே செல்வதற்கு 15 நிமிட பயணத்தை மக்கள் கூட்டத்தில் நீந்தி 5 மணி நேரமாக கடந்து வந்தார். அவர் பேசுவதற்கு காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் மதியம் 3 மணிக்குத்தான் மரக்கடைக்கே வந்தார். பின்னர் திமுக, பாஜக அரசை விமர்சித்து பேசினார்.
அப்போது அவருடைய மைக் சரியாக வேலை செய்யாமல் இருந்தது. எனினும் 10 நிமிடம் பேசிவிட்டு அரியலூரை நோக்கி சென்றுவிட்டார். கடந்த வாரமே திருச்சியில் விஜய் வருகையால் அனைத்து முக்கிய சாலைகளிலும் கூட்டம் இருந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே அடுத்தடுத்து வரும் பிரச்சாரங்களில் இது போன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் நடந்து கொள்ள தொண்டர்களுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.
-
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
தவெகவில் இணைந்த அன்றே சீட் கொடுத்த விஜய்.. பாஜகவில் இருந்து தாவி உடனே வேட்பாளர் ஆன சாய் சரவணன்! -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி












Click it and Unblock the Notifications