காமராஜர் ஏசி இல்லாம தூங்க மாட்டாரா? திருச்சி சிவாவை ரவுண்டு கட்டும் காங்கிரஸ்! கூடவே வந்த தவெக!
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் எனவும், மரணத்திற்கு முன் கருணாநிதியின் கையைப் பிடித்து ஜனநாயகத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என கூறியதாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவாவுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காமராஜர் குறித்து அவதூறான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறது தமிழக வெற்றி கழகம். தான் என்ன சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்று நினைப்பில் திருச்சி சிவா கட்டுக்கதைகளை இட்டுக்கட்டி பரப்புவதாக கூறியிருக்கிறார் அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளரான அருண்ராஜ்.
கடந்த 15 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்," மின்சாரம் இல்லை என காமராஜர் கண்டன கூட்டம் போடுகிறார். காமராஜருக்கு ஏசி இல்லை எனில் உடம்பில் அலர்ஜி வரும். அதற்காக அனைத்து பயணியர் தங்கும் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி அமைக்க உத்தரவிட்டேன்" என கருணாநிதி கூறியதாக பேசினார்.

மேலும், எமர்ஜென்சி காலத்தில் கலைஞர் கருணாநிதி காமராஜர் தமிழ்நாட்டை விட்டு போக வேண்டாம் என கூறியதாகவும், அதற்கு பிறகு கருணாநிதியின் நல்ல உள்ளத்தை புரிந்து கொண்ட காமராஜர் அவரது கையைப் பிடித்து நீங்கள் தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என கூறியதாக பேசி இருந்தார். திருச்சி சிவாவின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி, கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் திருச்சி வேலுசாமிக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தங்கள் கட்சியின் கொள்கை தலைவர் குறித்து அவதூறு பரப்புவதை பொறுத்துக் கொள்ள முடியாது என தமிழக வெற்றி கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்," எங்கள் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர் எளிமையின் வடிவம், நேர்மையான நிர்வாகச் சிற்பி மற்றும் ஒரு அப்பழுக்கற்ற அரசியல் துறவி.
இத்தகைய உயரிய தலைவர், நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று மறைந்த தி.மு.க. தலைவர் திரு.கருணாநிதி அவர்களிடம் கெஞ்சியது போல தி.மு.க.வைச் சேர்ந்த திருச்சி சிவா அவர்கள், பொய்யான, போலித் தோற்றத்தைக் கட்டமைக்க முயன்றுள்ளார்.
"இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த, சர்வாதிகாரத்தை அழிக்க, நீங்கள் தலைமையேற்று அணி நடத்துங்கள். உங்கள் பின்னால், நாங்கள் வரத் தயார்," என்றும் "தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, காவிரிப் பிரச்சினை, நெருக்கடி கால நிலை போன்றவற்றில் ஒவ்வொரு முடிவிற்கு முன்பும், அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் ஆயிற்றே என நினைக்காமல், அனுபவத்தில் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில், அவருடைய கருத்துகளைத் தெரிந்துகொண்டு செயல்பட்டிருக்கிறேன்" என்றும் தி.மு.க. தலைவராக இருந்த திரு.மு.கருணாநிதியே ஓர் அறிக்கையில், காமராஜர் எப்படி தனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தார் என்பதை வாக்குமூலமாகவே கூறியிருக்கிறார்.
நிலைமை இப்படி இருக்கையில்,'பெருந்தலைவர் காமராஜர் எப்படிக் கருணாநிதியிடம் ஜனநாயகத்தைக் காப்பாற்றுமாறு கூறி இருப்பார்' என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. சிறந்த பேச்சாளர் என்பதால், தான் சொல்லும் எல்லாவற்றையும் மக்கள் நம்புவார்கள் என்ற நினைப்பில், தி.மு.க.வைச் சேர்ந்த திரு.திருச்சி சிவா அவர்கள், கற்பனையான கட்டுக்கதைகளை இட்டுக்கட்டிப் பரப்புகிறார். எங்கள் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர் மீது அவதூறாகப் பரப்பப்படும் இதுபோன்ற பொய்ப் பிரசாரத்தை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் வன்மையாகக் கண்டிக்கிறோம்." என கூறியுள்ளார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா!












Click it and Unblock the Notifications