தவெக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை தொடங்கியது.. செங்கோட்டையன், ஆதவுக்கு நோ சொன்ன புஸ்ஸி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ளது. அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். தேர்தல்களில் தேர்தல் அறிக்கையை தான் கதாநாயகன் என்று கூறுவார்கள். திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை உருவாக்கியுள்ளனர். தவெக சார்பில் சீனியர் செங்கோட்டையன் இல்லாமலேயே தேர்தல் அறிக்கை குழு உருவாக்கப்பட்டது. தவெக தேர்தல் அறிக்கை குழுவினரின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருப்ப மனுக்கள் பெறுவது தொடங்கி தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பது வரை வெளியாகி வருவதால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

TVK Election Manifesto Team

தவெக தேர்தல் அறிக்கை குழு

பொதுவாக தேர்தல்களில் அந்தந்த கட்சிகளின் தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. திமுக, அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டு, அவர்கள் மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டு வருகிறார்கள். அதிமுக சார்பில் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துவிட்டனர். தவெக சார்பில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை விஜய் உருவாக்கியிருந்தார்.

இதில் அந்தக் கட்சியின் கொள்கை பிரிவு பொதுச்செயலாளர் அருண்ராஜ், ராஜ்மோகன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். சமீபத்தில் தவெக வில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் கூட அந்த குழுவில் உள்ளார். ஆனால் மிகுந்த அனுபவம் பெற்ற தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இடம்பெறவில்லை. இது பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

புஸ்ஸி அறிவிப்பில் டிவிஸ்ட்

இதுதொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழுவை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்கள். இந்த குழு, வருகின்ற 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் தேர்தல் அறிக்கை உருவாக உள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறுவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கைக் குழுவினர் மட்டுமே பங்கேற்பார்கள் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

நோ செங்கோட்டையன்

தேர்தல் அறிக்கை குழுவினர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று ஆனந்த் அறிவித்திருந்த நிலையில், இந்த கூட்டத்தில் விஜய், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகி அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் மட்டுமே பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+