Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புஸ்ஸி ஆனந்த் தவெக நிர்வாகிகளை ரூமுக்குள் கூப்பிட்டு அடிக்கிறாராம்.. திருச்சி சூர்யா பகீர் Exclusive

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகளை கூப்பிட்டு வைத்து அடிக்கிறார், திட்டுகிறார் என கூறுகிறார்கள். புஸ்ஸி ஆனந்த் பேச்சைக் கேட்டுக்கொண்டு விஜய் களத்தில் இறங்கினால், அரசியல் களத்தில் படு மோசமான தோல்வியைச் சந்தித்து வெளியேற நேரிடும் எனத் தெரிவித்துள்ளார் திருச்சி சூர்யா.

சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சியின் கொடி, கொடிப்பாடலை சமீபத்தில் விஜய் வெளியிட்டார். வரும் அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடக்கும் என்று விஜய் அறிவித்திருந்தார்.தவெகவின் கொள்கைகள், அக்கட்சியின் திட்டங்கள், அதைச் செயல்படுத்தும் கொள்கை தலைவர்கள் உள்ளிட்டவர்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

vijay trichy surya tvk

விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு முதல் மாநாடு நடக்கவுள்ளது. விஜய்க்கு முதல் அரசியல் மாநாடு என்பதால் அனைத்துக் கட்சிகளின் கண்களும் விஜய்யைச் சுற்றி வட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில் இதுபற்றி நமது ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகனும், முன்னாள் பாஜக மாநில நிர்வாகியுமான திருச்சி சூர்யா.

திருச்சி சூர்யா பேசுகையில், "விஜய் படம் வரும்போதெல்லாம், உதயநிதி ஸ்டாலின், வேறொருவரின் படங்களை விநியோகம் செய்ய எடுத்து அதிக ஸ்கிரீன்களில் போட்டு விஜய் பட வசூலைக் குறைத்து இமேஜை உடைப்பதாக ஒரு பனிப்போர் இருந்தது. விஜய் தனது நேரடி அரசியல் எதிரியாகப் பார்ப்பதும் உதயநிதி ஸ்டாலினைத்தான்.

யார் மாநாடு நடத்தினாலும், காவல்துறை அனுமதி பெற உரிய விளக்கங்களை கொடுத்துத்தான் ஆகவேண்டும். உரிய ஏற்பாடுகளை செய்யாமல் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் நாளை அதற்கு பொறுப்பேற்பது யார்? சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காவல்துறையையும் அரசையும் தான் கேள்வி எழுப்புவார்கள். எனவே, காவல்துறை அனுமதி வழங்க கேள்வி கேட்பதில் தவறில்லை.

நான் சப்பைக்கட்டு கட்ட வேண்டிய அவசியம் இல்லை. 2 லட்சம் பேர் கூடப்போகிறார்கள் என்றால் அதற்கு ஏற்றபடி போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும், இட வசதிகளைச் செய்திருக்க வேண்டும். முதலமைச்சர்கள் வருவதாக அடித்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். எந்த மாநில முதல்வர் வந்தாலும், அங்கிருந்து தமிழக அரசுக்கு தகவல் வந்திருக்கும்.

முன்னாள் அமைச்சர்களில் பணம் இருப்பவர்களை சேர்க்கலாம் என தவெகவினர் நினைக்கின்றனர். சொல்லிக் கொள்ளும்படி எந்த அரசியல் தலைவர்களும் விஜய் கட்சியில் சேரத் தயாராக இல்லை. அரசியல் அனுபவம் இல்லாமல் ஒரு மாநாட்டை நடத்த சரியாக திட்டமிடாமல் நடத்த முயற்சிக்கிறார்கள். ஆடியோ லாஞ்ச் மாதிரி மாநாட்டை நடத்த முடியாது.

புஸ்ஸி ஆனந்த்தை உடன் வைத்திருக்கும் வரை விஜய் கட்சி அவ்வளவுதான். நிர்வாகிகள் புலம்புகிறார்கள். நிர்வாகிகளை கூப்பிட்டு வைத்து அடிக்கிறார், திட்டுகிறார் என கூறுகிறார்கள். புதுச்சேரி அரசியலும் தமிழக அரசியலும் வேறு வேறு. புதுச்சேரியில் இருந்த புஸ்ஸி ஆனந்த்தை தமிழ்நாட்டில் பெரிய கட்சிக்கு பொறுப்பாளராக வைத்து சிறப்பாகச் செயல்பட முடியாது.

புஸ்ஸி ஆனந்த் பேச்சைக் கேட்டுக்கொண்டு விஜய் களத்தில் இறங்கினால், சினிமாவில் பல வெற்றிகளைக் குவித்த விஜய், அரசியல் களத்தில் படு மோசமான தோல்வியைச் சந்தித்து வெளியேற நேரிடும்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+