50000 விருப்பனுக்கள் காலி என சொன்னார்களே.. எவ்வளவு திரும்பி வந்துச்சு? விவரத்தை வெளியிடாத தவெக!
சென்னை: வெறும் 2.30 மணி நேரத்தில் சுமார் 50,000 விருப்ப மனுக்கள் விற்று தீர்ந்தன என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூறியிருந்தனர். ஆனால், விற்பனை செய்யப்பட்ட மனுக்களில் எவ்வளவு திருப்பி பெறப்பட்டது? என்கிற விவரம் வெளியாகவில்லை.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் வெற்றிப்பெற தவெக தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. இப்படி இருக்கையில்தான் கட்சியின் சார்பில், கடந்த 6ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன.

விருப்ப மனுவை பெற சுமார் 50000க்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் பனையூர் அலுவலகத்தில் குவிந்தனர். சரியாக மதியம் 12 மணிக்கு விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. மொத்த மனுக்களும் மதியம் 2.30க்குள் விற்று தீர்ந்துவிட்டன. ஆனால், இன்னும் அதிகமானோர் விருப்பமனுக்களை பெற விருப்பம் தெரிவித்தனர். ஆனால் மனுக்கள் இல்லை. மட்டுமல்லாது அதிமான அளவில் ஆட்கள் குவிந்ததால் பனையூர் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதனால் விருப்ப மனுக்கள் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே விநியோகிக்கப்பட்ட மனுக்கள் திரும்ப பெற பிப்.20ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை எவ்வளவு மனுக்கள் திரும்ப வந்திருக்கின்றன. என்கிற விவரம் வெளியாகவில்லை. விருப்ப மனு விநியோகிக்கப்பட்டபோது கட்சியினர் எதையும் சொல்லவில்லை. ஆனால், மனுவை திருப்பி கொடுக்கும்போது ரூ.10,000 வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் 10 மனுக்கள் கூட முழுதாக வரவில்லை என்று சொல்லப்படுகிறது. விநியோகிக்கப்பட்டது 50,000 மனுக்கள் என்று சொல்லப்பட்டாலும் கைக்கு வந்தது 4,000 மனுக்கள் என்று சொன்னால், கவுரவ பிரச்சனையாகிவிடும் என்று நினைத்துதான் தவெக தலைமை, எத்தனை மனுக்கள் திருப்பி வந்திருக்கிறது என்கிற விவரத்தை வெளியிடவில்லை என நிர்வாகிகள் கூறுகின்றனர்.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications