6 மணிக்கு மேல் நோ! தேர்தல் அறிவிப்புக்கு பின் இரவில் பிரசாரம் செய்வதை தவிர்க்கும் விஜய்
சென்னை: தவெக தலைவர் விஜய் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு ஒரு நாள் கூட 6 மணி மேல் பிரசாரம் செய்யவில்லை. காவல்துறை அனுமதி வழங்கவில்லை என முதலில் விஜய் தரப்பு சொலி வந்த நிலையில் இன்று 8 மணி விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 6 மணியோடு பிரசாரத்தை முடித்துக்கொண்டு பனையூருக்கே புறப்பட்டு சென்றுள்ளார்.
திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, காரைக்குடி, திருப்பூர் என பிரசாரம் மேற்கொண்ட விஜய் எங்கும் 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்யவில்லை. எந்த ஊரிலும் தங்காத விஜய் மீண்டும் பனையூருக்கே திரும்பியபடி இருந்தார். அந்த வகையில் இன்று சென்னையில் பிரசாரம் மேற்கொண்ட போதிலும், 8 மணி வரை காவல்துறை அனுமதி வழங்கியிருந்தும் விஜய் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பியது பேசுபொருளாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களமிறங்குகிறார். தேர்தலுக்கு இன்னும் சற்றேறக்குறைய ஒரு வாரமே உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் அனல் பறக்க பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வந்த பிளைட்டிலேயே வீடு திரும்பும் விஜய்
கடும் வெயிலுக்கு மத்தியிலும் பிரசாரம் சூடுபறக்க நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் விஜய் தேர்தல் தேதி அறிவித்த பிறகு வீதிவிதியாக இறங்கி பிரசாரம் செய்வார் என்று தவெக நிர்வாகிகள் கூறி வந்தனர். ஆனால் தேர்தல் அறிவிப்புக்கு பிறகும் விஜய் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பிரசாரம் என்ற பாணியில் செய்து வருகிறார்.
பிற தலைவர்கள் அனைவரும் பிரசாரம் செய்துவிட்டு அருகில் உள்ள இடங்களில் தங்கிவிட்டு மறுநாள் அங்கிருந்தே பிரசாரம் செய்யும் வகையில் தங்கள் பயண திட்டத்தை வகுத்துள்ளனர். ஆனால் விஜய்யை பொறுத்தரை சென்னையில் இருந்து தனி விமானத்தில் கிளம்பி, பிரசாரம் செய்யும் ஊருக்கு சென்றுவிட்டு.. பின்னர் அதே பிளைட்டை பிடித்து சென்னைக்கே திரும்பி விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
6 மணிக்கே பனையூருக்கு புறப்பட்டார்
அதேபோல, அவரது பிரசார திட்டமும் மாலை 6 மணிக்குள் முடித்துவிடும் அளவிலேயே நடைபெறுகிறது. உதாரணத்திற்கு தவெக தலைவர் விஜய் இன்று சென்னையில் பிரசாரம் மேற்கொண்டார். சென்னையில் தியாகராயநகர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய 3 இடங்களில் விஜய் ரோடு ஷோ சென்றார். வழி நெடுக அவருக்கு உற்சாக வரவேற்பை தொண்டர்கள் அளித்தனர்.
சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலையில் அவர் பிரசாரம் மேற்கொள்வதாக இருந்தது. நேரமின்மை காரணமாக அந்த பயணம் திட்டம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் சென்னை மாநகராட்சி அருகே தனது பிரசாரத்தை விஜய் நிறைவு செய்தார். பிரசார வேனில் மேற்பகுதியில் இருந்து கீழே இறங்கி, கார் இருக்கையில் அமர்ந்து கொண்டார். இரவு 8 மணி வரை விஜய் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருந்த போதும், அவர் தனது பிரசாரத்தை 6 மணியுடன் முடித்துக்கொண்டு பனையூருக்கு திரும்பினார்.
6 மணிக்கு மேல் பிரசாரம் செய்யாதது ஏன்?
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு விஜய், 6 மணிக்கு முன்பே தனது பிரசாரத்தை முடித்துகொள்வதை பார்க்க முடிகிறது. அதற்கு முன்பாக தனது ரோடு ஷோக்களின் போது விஜய் 6 மணிக்கு மேல் நடத்தியுள்ளார். ஆனாலும் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தொடர்ந்து விஜய் 6 மணிக்கு முன்பாகவே பிரசாரத்தை முடித்துக்கொள்வது, அவருக்காக காத்திருக்கும் தவெகவினருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
அதேநேரத்தில் மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டே விஜய் 6 மணிக்கு முன்பாக பிரசாரத்தை முடித்துக்கொள்வதாக தவெகவினர் கூறுவதையும் பார்க்க முடிகிறது. எனினும், போலீசார் உரிய அனுமதி கொடுத்தும் விஜய் தனது பிரசாரத்தை ரத்து செய்வதை வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதையும் பார்க்க முடிகிறது. முதல் நாள் பிரசாரம் செல்லும் போது கூட பெரம்பூர் மற்றும் கொளத்தூரில் மட்டுமே பிரசாரம் சென்றார். அப்போதும் கொளத்தூரில் எதுவும் பேசாமல் புறப்பட்டார். அதேபோன்று அன்றைய தினம் வில்லிவாக்கம் பிரசாரம் செய்ய இருந்தார். ஆனால் அதனையும் விஜய் ரத்து செய்திருந்தார்.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன்












Click it and Unblock the Notifications