கடலூரில் விஜய்யின் நாளைய பிரசாரம் திடீர் ரத்து.. தவெக சொன்ன காரணத்தை பாருங்க
சென்னை: தவெக தலைவர் விஜய் நாளை கடலூரி பிரச்சாரம் செய்ய இருந்தார். இந்த நிலையில் நாளைய பிரச்சாரம் ஒத்தி வைக்கப்படுவதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர். நாளை புதுவையில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் இந்த பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளதாகவும், அதற்கு பதில் வரும் 11 ஆம் தேதி இங்கு பிரச்சாரம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் களம் இறங்கி இருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் விஜய் தன் கூட்டங்களுக்கு போலீசார் அனுமதி கொடுத்தாலும் அதனை ரத்து செய்து வருகிறார்.

வேட்பாளர்கள் அறிமுகங்களை தான் சிம்பிளாக நட்சத்திர விடுதியில் வைத்த விஜய், 234 தொகுதிகளுக்காவது சென்று பிரச்சாரம் செய்வார் என நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கும் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை என்று சொல்லி வருகிறார்கள். பெர்ம்பூர் தொகுதி மற்றும் கொளத்தூர் தொகுதிக்கு சென்ற விஜய் வில்லிவாக்கம், அண்ணாநகர் தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்ய போகாமல் ரத்து செய்தார்.
பாதுகாப்பு காரணம் என்று கூறி வீட்டிற்கு திரும்பிவிட்டார். முதல் நாள் தான் இப்படி என்றால், அடுத்தடுத்த 3 நாட்களிலும் பிரச்சாரம் செய்யாமல் வீட்டிலேயே இருந்துவிட்டார். இதனால் தவெக நிர்வாகிகளே விஜய் மீது அப்செட் ஆகியதாக கூறப்படுகிறது. பரப்புரையை எதிர்பார்க்கும் நிர்வாகிகள் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள்தான் இருக்கின்றன. 14 நாட்களில் எப்படி 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள முடியும்? அப்படியெனில் ஒரு நாளைக்கு 16 தொகுதிகளில் போய் பேச இருக்கிறாரா விஜய்? என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தொடர்ந்து வில்லிவாக்கம், தி.நகரில் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், போதுமான நேரம் வழங்கவில்லை என்று கூறி அந்த பரப்புரையும் விஜய் ரத்து செய்திருந்தார். அதேபோல சைதாப்பேட்டையில் பரப்புரை மேற்கொள்ள இருந்தார். அதுவும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் தவெக நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்து இருந்தனர். இந்த நிலையில் இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.
நெல்லையில் பிரச்சாரம் செய்த விஜய், தொடர்ந்து தூத்துக்குடியில் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது மக்கள் அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் விஜய் நாளை கடலூரி பிரச்சாரம் செய்ய இருந்தார். இதற்கான ஏற்பாடுகளையும் தவெக நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்த நிலையில் கடலூர் பிரச்சாரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர்.
விஜய், கடலூர் மஞ்சக்குப்பம், வடலூர், சேத்தியாதோப்பு, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் நாளை பிரச்சாரம் செய்ய இருந்தார். இதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டு போலீசாரும் அனுமதி அளித்து இருந்தனர். நாளை புதுவையில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. புதுச்சேரியில் நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அந்த வழியாக கடலூர் செல்ல விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தான் கடலூர் பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி 11ஆம் தேதிக்கு அனுமதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விண்ணப்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications