அகமதாபாத் விமான விபத்து! சோகமே ததும்ப! கண்களை மூடிய விஜய்! அந்த 2 நிமிடம் நடந்தது என்ன?
சென்னை: குஜராத் விமான விபத்து தொடர்புடைய வீடியோக்கள், புகைப்படங்களை பார்த்தால் மனம் பதறுகிறது என தவெக தலைவரும் நடிகருமான விஜய் வேதனை தெரிவித்துள்ளார். மேலும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலியும் செலுத்தினார்.
10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் பரிசையும் நடிகர் விஜய் வழங்கி வருகிறார். தற்போது 3 ஆவது ஆண்டாக வழங்கி வருகிறார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரே நாளில் தமிழகம் முழுவதுமுள்ள மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கிய போது அவரால் நிற்க முடியாமல் டேபிளில் சாய்ந்தபடி இருந்தார். இதையடுத்து அடுத்த ஆண்டு 2024 இல் மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்பட்டது.
அது போல் இந்த ஆண்டும் மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று 3ஆம் கட்டமாக வழங்கி வருகிறார். ஏற்கெனவே இரு கட்டங்களாக மாமல்லபுரத்தில் இந்த விழா நடந்தது.
கடந்த மாதம் 30ஆம் தேதி நடந்த விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4ஆம் தேதி 84 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்தவர்களுக்கு வைரக் கம்மல், மாணவராக இருந்தால் வைர மோதிரம் பரிசாக வழங்கப்படுகிறது.
அது போல் தொகுதிவாரியாக 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ 5 ஆயிரம் ரொக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று 3ஆவது கட்டமாக மாமல்லபுரத்தில் இந்த விழா நடக்கிறது. தமிழகம், புதுவையில் 51 சட்டசபை தொகுதிகள் வாரியாக மாணவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
இந்த விழாவில் குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது விஜய் பேசுகையில், குஜராத்தில் மிகப் பெரிய சோகமான நிகழ்வு நடந்துள்ளது. அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத வாழ்க்கை இது.
குஜராத் விமான விபத்து புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்தால் மனம் பதறுகிறது. அவர்களுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவோம் என விஜய் கேட்டுக் கொண்டார்.
அப்போது விஜய் கண்களை மூடிக் கொண்டு அஞ்சலி செலுத்தினார். முகத்திலும் சோகம் ததும்பியது. உடன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண் ராஜ் ஐஆர்எஸ் உள்ளிட்டோர் இருந்தனர். மாணவர்களும் பெற்றோரும் மவுன அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications