"அதிமுகவிடம் ஆதரவு கோரிய தவெக".. கடைசியில் விஜய் ஏமாற்றியதால் எடப்பாடி எடுத்த சபதம்.. என்ன நடந்தது?
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மெஜாரிட்டி இல்லை. இதனால் முதலில் தவெக, அதிமுகவிடம் ஆதரவு கோரி பேசியதாகவும், அதன்பிறகு திடீரென்று பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக தலைவர்கள், தவெக தலைவர் விஜய் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும், எப்படியாவது தவெகவை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கும் முனைப்பில் செயல்பட்டு வருவதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மெஜாரிட்டி இல்லை. ஆட்சியை பிடிக்க 118 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் தவெக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் தவெக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் அதிமுகவை தொடர்பு கொண்டு ஆதரவு கோரியுள்ளது.

தவெகவின் அருண்ராஜ், அதிமுகவின் முக்கிய தலைவர் ஒருவரை தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டுள்ளார். அதற்கு அதிமுக தலைவர்கள் ஆதரவு தருவதாகவும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தவெக, அதிமுகவை ஏமாற்றி உள்ளது. அதாவது முதலில் தவெக தான் ஆதரவு கேட்டு அதிமுகவை தொடர்பு கொண்டுள்ளது. தாமாகவே முன்வந்து ஆதரவு கோரியதால் அதிமுகவுடன் ஆதரவு வழங்க தயாராகி உள்ளது. அதன்பிறகு தான் தவெகவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதில் உடன்பாடு இல்லை.
இருப்பினும் கூட தவெகவினர் நேரில் சந்தித்து பேசினால் பரிசீலனை செய்யலாம் என்ற முடிவில் எடப்பாடி பழனிச்சாமி இருந்துள்ளார். ஆனால் தவெக சார்பில் இருந்து விஜய் பேசவே இல்லை. மாறாக 2ம் கட்ட, 3ம் கட்ட தலைவர்கள் தான் அதிமுகவினரிடம் பேசி வந்துள்ளனர். அதோடு அவர்களும், அதிமுக தலைவர்களை நேரில் சந்திக்கவில்லை. இதனால் அதிமுகவினர் கடும் கோபமடைந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி நேற்று முன்தினம் மதியம் 1 மணி வரை தவெகவிற்கு, அதிமுக கெடு வழங்கி உள்ளது. அதற்குள் விஜய் ஆதரவு கோரினால் சப்போர்ட் செய்வது பற்றி பரிசீலிக்கலாம் என்று அதிமுகவினர் முடிவு செய்தனர். ஆனால், தவெக தரப்பினர் அதிமுகவினரை தொடர்பு கொள்ளவே இல்லை. இதற்கிடையே தான் காங்கிரஸ் கட்சியினர் தவெகவிற்கு ஆதரவு வழங்கியதோடு, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கைகோர்த்தது.
இதனால் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பிற தலைவர்கள் கடும் கோபமடைந்துள்ளனர். தங்களை ஏமாற்றிவிட்டதாக அதிமுக தலைவர்கள் நினைத்தனர். இதனால் விஜய்யை ஆட்சியமைக்க விடக்கூடாது என்ற முடிவிற்கு அதிமுகவினர் வந்துள்ளனர். அதோடு தவெகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்பதால் தான் அதிமுக எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிச்சாமி புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே தான் தமிழகத்தில் தவெக மெஜாரிட்டியை நிரூபிக்காவிட்டால் அதிமுக - திமுக கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றலாம் என்ற தகவல் வெளியாகி வருகின்றன. இதற்கான பேச்சுவார்த்தை திரைமறைவில் போய் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில திமுகவும், தவெகவிற்கு மெஜாரிட்டி கிடைக்க விடாமல் செய்வதில் உறுதியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து தவெகவில் ஐக்கியமானதால் திமுக ஏமாந்துள்ளது.
இதனால் திமுக தனது கூட்டணியில் வென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளின் 6 எம்எல்ஏக்களின் ஆதரவை தவெகவிற்கு வழங்க கூடாது என்றும், தங்களுடன் தொடர்ந்து கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளனர். இந்த கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியுள்ள நிலையில் ஸ்டாலின் இந்த கோரிக்கையை 3 கட்சிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் விஜய்யின் தவெகவிற்கு மெஜாரிட்டி கிடைக்க கூடாது என்பதில் அதிமுக - திமுக உறுதியாக உள்ளன. இந்த கட்சிகள் அல்லது அதன் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே விஜய்யால் முதல்வராக முடியும். ஆனால் தவெகவின் செயலால் கடும் கோபத்தில் உள்ள திமுக - அதிமுக விஜய்யிக்கு மெஜாரிட்டி கிடைக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளன. இதனால் தமிழக அரசியல் களம் அடுத்த பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.












Click it and Unblock the Notifications