மதவாதத்திற்கு எதிராக கருத்தியல் போர் நடத்தியவர் நெல்லை கண்ணன்! வேல்முருகன் வேதனையுடன் இரங்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதவாதத்திற்கும், பாசிசத்திற்கும் எதிரானவர் நெல்லை கண்ணன் என அவர் குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.

Recommended Video

    நெல்லை கண்ணன் உயிரிழப்பு - ஆழ்ந்த சோகத்தில் தமிழ்நாடு

    தன் மீது தனிப்பட்ட முறையில் அளவுக்கடந்த அன்பை வைத்திருந்த நெல்லை கண்ணனின் மறைவு பெரும் துயரமளிப்பதாக வேல்முருகன் கூறியிருக்கிறார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் பதிவில்;

    தமிழ்க்கடல்

    தமிழ்க்கடல்

    தமிழ்க்கடல் அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் மறைவு - தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு!தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், 'தமிழ்க்கடல்' அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் காலமானார் என்ற செய்தி பெரும் துயரமளிக்கிறது. நாடறிந்த பேச்சாளராகவும் தமிழறிஞராகவும் விளங்கிய 'தமிழ்க்கடல்' அய்யா நெல்லை கண்ணன் அவர்கள்,அரசியல் தலைவர்,எழுத்தாளர்,இலக்கியப் பேச்சாளர், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர்.

    ஈடு செய்ய முடியாது

    ஈடு செய்ய முடியாது

    தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மீது கருத்தியல் உடன்பாடு கொண்ட ஐயா அவர்கள், தனிப்பட்ட முறையில் என் மீது அளவுக்கடந்த அன்பை வைத்திருந்தார். மதவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் அவற்றுக்கெதிராக பெரும் கருத்தியல் போரை நடத்தி வந்த சிறந்த அறிவாளர் - கருத்துப் பங்களிப்பாளரான அய்யா நெல்லை கண்ணன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று.

    தமிழ் ஆர்வலர்கள்

    தமிழ் ஆர்வலர்கள்

    சமகாலத்தில் தமிழ் இலக்கியத்தை தன் சொற்களால் வளப்படுத்தியும், தமிழின உணர்ச்சி மக்களிடம் பரப்பியும் வாழ்ந்து மறைந்துள்ள ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் மறைவு தமிழினத்திற்குப் பேரிழப்பாகும்.அய்யா நெல்லை கண்ணன் அவர்களுடைய மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     அரசியல் தலைவர்கள்

    அரசியல் தலைவர்கள்

    நெல்லை கண்ணன் மறைவுக்கு குறிப்பிட்ட இரண்டு கட்சிகளை தவிர ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்கள் இரங்கலை பதிவு செய்துள்ளனர். வேல்முருகன் குறிப்பிட்டிருப்பதை போல் நெல்லை கண்ணன் வெறுமனே பட்டிமன்ற பேச்சாளர் மட்டும் கிடையாது. அரசியல் தலைவர்,எழுத்தாளர்,இலக்கியப் பேச்சாளர், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகச் சிறப்புக்கு சொந்தக்காரர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+