முள்ளிவாய்க்கால் நினைவு தினம்.. வீரவணக்கம் செலுத்திய தவெக தலைவர் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று உறுதி ஏற்போம் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு, இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில், விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல் நடந்தது. அப்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழந்தனர்.

TVK President Vijay Pledges Support for Global Tamil Community on Mullivaikkal Memorial Day

இந்தக் கொடூரத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 16வது முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி, உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. கட்சி தலைமை உத்தரவின் பேரில் மாவட்டச் செயலாளர்கள் இந்நிகழ்வுகளை ஒருங்கிணைத்துள்ளனர்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.

மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும். மாமக்கள் போற்றுதும்! மாவீரம் போற்றுதும்!" எனப் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+