அறநிலையத்துறைக்கு பிராமண அமைச்சர்.. துறை உருவாக்கப்பட்ட வரலாறே சிதைந்துவிட்டதே! விஜய் மீது விமர்சனம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை விரிவாக்கப் பட்டியலில், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ ரமேஷுக்கு 'இந்து சமய அறநிலையத்துறை' (HR&CE) ஒதுக்கப்பட்டிருப்பது வெறும் சாதாரண அமைச்சர் பதவி ஒதுக்கீடு அல்ல; அதற்குப் பின்னால் ஒரு நூற்றாண்டு காலத் தமிழக அரசியல் வரலாறும், சமூகநீதிப் போராட்டமும் அடங்கியிருக்கிறது.
ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்த அமைச்சரிடம் இந்தத் துறையை விஜய் ஒப்படைத்திருப்பது, தமிழகத்தின் மிக ஆழமான வரலாற்றுப் பக்கங்களை மீண்டும் புரட்ட வைத்திருக்கிறது. ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்த நபரை இந்தத் துறையின் அமைச்சராக விஜய் அமர வைத்திருப்பது, அறநிலையத்துறை உருவான அடிப்படை தத்துவத்தையே குழிதோண்டிப் புதைக்கும் செயல் என அரசியல் விமர்சகர்கள் கடுமையாகச் சாடி வருகிறார்கள்.

நீதிக்கட்சி போட்ட அஸ்திவாரம்: அறநிலையத்துறை உருவான கதை!
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை என்பது ஏதோ ஆன்மீகத்தை மட்டும் நிர்வகிக்கும் துறை அல்ல. அது சமூகநீதியின் ஒரு மிகப்பெரிய அடையாளம்.
1925 / 1927 (நீதிக்கட்சியின் சட்டம்): சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி (Justice Party), கோவில் நிர்வாகத்தை அரசின் சட்டப்பூர்வ வாரியத்தின் கீழ் கொண்டு வர 'மெட்ராஸ் இந்து சமய அறக்கட்டளைச் சட்டத்தை' (Madras Hindu Religious Endowments Act) கொண்டு வந்தது.
1951 & 1959 (சட்டப்பூர்வ வடிவம்): சுதந்திரத்திற்குப் பிறகு, பரம்பரைச் சலுகைகள் முழுமையாக ஒழிக்கப்பட்டு, 1959-ல் 'தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம்' (Act 22 of 1959) இறுதி வடிவம் பெற்றது. இன்றுவரை பல்லாயிரக்கணக்கான கோவில்கள் இந்தச் சட்டத்தின் கீழ் தான் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
காமராஜர் செய்த தலித் புரட்சி!
திராவிட இயக்கங்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் பெருந்தலைவர் காமராஜரும் இந்தத் துறையைச் சமூகநீதிக்கான ஆயுதமாகவே பயன்படுத்தினார். 1954-ல் காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, தலித் சமூகப் போராளியான ரெட்டமலை சீனிவாசனின் பேரன் பி. பரமேஸ்வரன் என்பவரைத் தனது அமைச்சரவையில் 'இந்து சமய அறநிலையத்துறை' அமைச்சராக்கினார். கோவிலுக்குள் நுழையவே ஒரு காலத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை, ஒட்டுமொத்தக் கோவில் நிர்வாகத்தையே வழிநடத்தும் துறையின் அமைச்சராக்கி காமராஜர் அன்று நிகழ்த்திய புரட்சி, சமூகநீதி வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.
வரலாற்றை மாற்றிய விஜய்: பிராமண நியமனத்தின் பின்னணி அரசியல்!
நீதிக்கட்சி காலம் தொட்டு, குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கத்தில் இருந்து கோவில் நிர்வாகத்தை மீட்டு அனைத்து மக்களுக்குமானதாக மாற்றுவதே அறநிலையத்துறையின் அடிப்படை தத்துவமாக இருந்தது. ஆனால், தற்போதைய சூழலில், பிராமண அமைப்புகள் மற்றும் வலதுசாரி கட்சிகள் "கோவில்களை அரசிடமிருந்து விடுவித்து மீண்டும் பழையபடி ஒப்படைக்க வேண்டும்" என்று கோரி வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில் தான், அதே பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஸ்ரீரங்கம் ரமேஷை அறநிலையத்துறை அமைச்சராக்கி விஜய் ஒரு புதிய அரசியல் சதுரங்கத்தை ஆடியிருக்கிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டங்கள், கோவில் சொத்துக்கள் மீட்பு என அறநிலையத்துறை சமூக சமத்துவத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் போது, கோவில் விடுவிப்பு அரசியலைப் பேசும் பின்னணி கொண்ட ஒருவரை அதன் தலைவராக்குவது ஆபத்தானது.
விஜய்யின் இந்த அதிரடி நகர்வு இருவேறு விவாதங்களை எழுப்பியுள்ளது:
காமராஜர், கருணாநிதி, முக ஸ்டாலின் போன்ற தலைவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைக் கொண்டு கோவில் நிர்வாகத்தை ஜனநாயகப்படுத்தியதற்கு நேர்மாறாக, மீண்டும் பழைய மரபுக்கே விஜய் வழிவகுக்கிறாரா? என்ற கேள்வியும், திராவிட மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களின் விமர்சனங்களும் எழத் தொடங்கியுள்ளன.
"கோவில் சொத்துக்களைக் காப்பாற்ற நீதிக்கட்சி சட்டம் போட்டது; அதை திமுக முன்னோக்கி கொண்டு சென்றவாது. கோவில் நாற்காலியில் தலித் சமூகத்து பரமேஸ்வரனை உட்கார வைத்துக் காமராஜர் அழகு பார்த்தார்! ஆனால் இன்று, 'கோவிலை விடுவி' என முழங்கும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ரமேஷிடமே அதே அறநிலையத்துறை சாவியைக் கொடுத்திருக்கிறார் விஜய். வரலாற்றைத் தலைகீழாக மாற்றி விஜய் போட்டிருக்கும் இந்த 'ஆன்மீ' கணக்கு, கோட்டை வட்டாரத்தை அனல்பறக்க வைத்துக் கொண்டிருக்கிறது!"
-
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
ஸ்மார்ட் மீட்டர், பரந்தூர், ECR பாலம்! முக்கிய திட்டங்களை முடக்கிய விஜய்! தமிழ்நாட்டிற்கு பேராபத்து -
திமுகவிற்கு சோதனை மேல் சோதனை.. சுற்றி நிற்கும் பருந்துகள்! தப்பவே முடியாது போலயே.. ஸ்டாலினுக்கு செக் -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
சிக்கும் செந்தில் பாலாஜி? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தோண்டப்படும் டாஸ்மாக் முறைகேடு! -
சென்னை ஆன்லைன் கட்டிட அனுமதியில் அதிரடி மாற்றம்.. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு பறந்த மெசேஜ்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
மின்துறைக்கு குட்நியூஸ்.. 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி!












Click it and Unblock the Notifications