Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் வெளியிட்ட அறிக்கையில் இருந்த போட்டோவை கவனிச்சீங்களா.. திடீர் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27 ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று முறைப்படி வெளியானது. வழக்கம்போல் மாநாடு தொடர்பான தேதியை நடிகர் விஜய் அறிக்கை வழியாக பொதுமக்களிடம் தெரிவித்துள்ள நிலையில் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த போட்டோ விவாதத்தை கிளப்பி உள்ளது.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு என்பது அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை அந்த கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.

vijay vikravandi

இதனால் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள நடிகர் விஜயின் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் மாநாட்டுக்கு தயாராகி வருகின்றனர்.

அதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிய அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது நடிகர் விஜய் இன்று வெளியிட்ட அறிக்கை என்பது விவாதத்தை கிளப்பி உள்ளது. அதாவது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியது முதல் அவரது பெயரில் வெளியிடப்படும் அறிக்கையில் நெற்றியில் பொட்டு வைத்திருக்கும் போட்டோ இடம்பெற்றிருக்கும்.

நடிகர் விஜயை பாஜகவினர் இதற்கு முன்பு ஜோசப் விஜய் என விமர்சனம் செய்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் விஜய் இந்த போட்டோவை பயன்படுத்துவதாக கூறப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி தான் அனைத்து மக்களுக்குமானவன். சாதி மதத்தை கடந்தவன் என்பதை காட்டும் வகையில் நடிகர் விஜயின் பொட்டு வைத்திருக்கும் போட்டோ அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் பரவின.

இந்நிலையில் தான் இன்று வெளியான அறிக்கையில் இடம்பெற்றிருந்த நடிகர் விஜயின் போட்டோ என்பது மாறியிருந்தது. நடிகர் விஜய் நெற்றியில் பொட்டுடன் இருக்கும் போட்டோவுக்கு பதில் அவர் வெள்ளை நிற சட்டை அணிந்து நெற்றியில் பொட்டு இன்றி இருக்கிறார். ஏற்கனவே திமுகவை போல் விநாயகர் சதுர்த்திக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிக்காத நிலையில் கேரளா மக்களின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தது சர்ச்சையானது. அந்த வரிசையில் தற்போது விஜயின் அறிக்கையில் இடம்பெற்றிருந்த போட்டோ மாறியிருப்பது விவாதத்தை கிளப்பி உள்ளது.

இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் 8 ம் தேதி விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கை என்பது தமிழக வெற்றி கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ததை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளதை தொண்டர்களுக்கு தெரிவிக்கும் வகையில் இருந்தது. இந்த அறிக்கையில் நடிகர் விஜய் நெற்றியில் பொட்டு இருந்தது. ஆனால் அதற்கு பிறகு தான் அவரது அறிக்கை போட்டோ என்பது மாறி உள்ளது.

அதாவது கடந்த 15ம் தேதி நடிகர் விஜய் போட்டோவுடன் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் நடிகர் விஜயின் நெற்றியில் பொட்டு இல்லை. அதன்பிறகு செப்டம்பர் 17 ம்தேதி பெரியார் பிறந்தநாளுக்கு தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட அறிக்கையிலும் விஜய் நெற்றியில் பொட்டு இல்லை. அன்றைய தினம் நடிகர் விஜய் நேரடியாக சென்னையில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி இருந்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை பெரியார் கொள்கைகளை மேடைக்கு மேடை முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் தான் அதிகமாக பேசி வருகின்றனர். இதனால் திமுகவை போல் விஜயும் பெரியார் கருத்துகளை பின்பற்றி தனது கட்சி கொள்கைகளை முன்னெடுக்கிறாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இத்தகைய சூழலில் தான் இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் தலைவர் நடிகர் விஜய் பெயரில் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27 ம் தேதி நடைபெற உள்ளதாக வெளியிடப்பட்ட அறிக்கையிலும் போட்டோ மாறி இருந்தது. நடிகர் விஜய் நெற்றியில் பொட்டுடன் இருக்கும் போட்டோவுக்கு பதில் வெள்ளை நிற சட்டை அணிந்து நெற்றியில் பொட்டு இல்லாத போட்டோ இடம்பெற்றிருந்தது. இதனால் நடிகர் விஜய் திமுக பாணியில் கடவுள் மறுப்பு கொள்கையை முன்னெடுக்கிறாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக இன்று விக்கிரவாண்டி அரசியல் மாநாடு தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், ‛‛தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல் நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழக மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து கொண்டே வருகிறது.

கழகக் கொடியேற்று விழாவின் போது நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றும் வகையில் தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக் கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு.

வரும் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிய அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெறுகிறது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.

தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்து வரும் நிலையில் அதற்கான களப்பணிகளும் தொடங்கப்படவுள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்.

இந்த நிலையில் நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உரிமையுடன் வேண்டுகிறேன்.

விரைவில் சந்திப்போம்
வாகை சூடுவோம்
அன்புடன் விஜய்'' என கூறப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+