தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு.. விஜய் அரசியலில் பங்கேற்பதை தடுக்க முயல்வதாக தவெக சார்பில் பதில் மனு
சென்னை: சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தடை கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தாக்கல் செய்த வழக்கை, அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தவெக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பதிவுத் துறை மூலம் தங்கள் அமைப்பின் வணிக முத்திரையாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு தடை விதிக்கக் கோரி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

தவெக பதில் மனு
இந்த வழக்கில், தவெக பதில் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'கொள்கை அடையாளமாகவே அரசியல் கட்சி, கொடியை பயன்படுத்துகிறது. இதில் வர்த்தக நடவடிக்கையோ, பொருளாதார பரிவர்த்தனையோ ஏதும் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.
தவெக எந்த வர்த்தகத்திலும், வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. நடிகர் விஜய் அரசியலில் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என்ற அற்ப காரணத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்சியினருடன் விரிவான விவாதங்கள் நடத்தி வடிவமைக்கப்பட்டுள்ள தவெக கட்சிக் கொடி தமிழ் வரலாறு, கலாச்சாரம், அரசியலை உள்ளடக்கிய கொள்கை வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
புரட்சியை குறிக்க
புரட்சியை குறிக்க சிவப்பும், நம்பிக்கையை குறிக்க மஞ்சள் வண்ணமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிறங்களை பயன்படுத்துவதற்கு இதுபோன்ற விளக்கங்களை மனுதாரர், வணிக முத்திரை பதிவின்போது அளித்துள்ளாரா? ' என்றும் தவெக தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும்
மேலும், "தவெக கொடியில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறங்களை பயன்படுத்த தடைவிதித்தால், அது கட்சியின் அரசியல் இருப்பையே பாதிக்கச் செய்யும். வணிக முத்திரை என்பது, சங்கங்கள் மட்டுமே பயன்படுத்த முடியாது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அதிக அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" எனவும் தவெக தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி அமர்வின் முன் விசாரணைக்கு வந்த போது, தவெக பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது!












Click it and Unblock the Notifications