திமுகவுக்கு மீண்டும் தூதுவிட்டதா தவாக.. ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. டிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பு தகவல்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. (TVK Velmurugan)
சிபிஎம், விசிக கட்சிகள் கூடுதல் தொகுதிகளை வேண்டும் என்று கூறுகிறார்கள். கூடுதல் தொகுதி ஒதுக்காததால் திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகுவதாக வேல்முருகன் அறிவித்துள்ளர். இந்நிலையில் தவாக தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும், அவர்களுக்கு அழைப்பு விடுக்கும் என்றும் திமுக டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்ல முடிவு
திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "புதுச்சேரி கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், எங்கள் தலைவருடன் பேசியுள்ளார். விரைவில் அங்கும் நல்ல முடிவு எடுக்கப்படும். இன்று மாலைக்குள்ளாக அங்கு நல்ல முடிவு எட்டப்படும். எண்ணிக்கைதான் பிரச்சனை.
தொகுதிகள் அதிகரிப்பு
எல்லா கட்சிகளுக்கும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாக எல்லோருக்கும் இருக்கும். இது தவறு கிடையாது. அதே நேரத்தில் வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டுதான் முடிவு செய்ய முடியும். மிகப்பெரிய எதிரியான பாஜவை எதிர்த்து களமாட வேண்டும் என்பதையும் மனதில் சிந்திக்க வேண்டும்.
வேல்முருகன் தகவல் கொடுக்கல
தவாக வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து விலகுவது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை. எங்களை அழைத்தால் பேசுவதற்கு தயார் என்பது போலத்தான் தகவல் வந்திருக்கிறது. பார்ப்போம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று. எங்களுடன் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரையும் அழைத்து பேசி வருகிறோம். தொகுதி பங்கீடை இறுதி செய்ய வேண்டுமல்லவா. அதனடிப்படையில் தோழமை கட்சி அனைவரிடமும் பேசுகிறோம்.
மீண்டும் அழைப்பு
தவாக எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டதாக சொன்னாலும், எங்களுக்கு அந்த செய்தியை சொல்லவில்லை. அதனால் தவாகவுக்கும் அழைப்பு விடுப்போம். நாங்கள் அழைத்தால் பேச தயார் என்றுதான் கூறியுள்ளார். திமுக பற்றிய புகார்கள் தவறான பிரச்சாரம். எங்கள் தலைவர்களிடம் அவர் தொகுதி பங்கீடு பேச தயார் என்று கூறியுள்ளார். அதனால் தான் நாங்கள் பொறுமையாக இருக்ககிறோம். இரண்டு கருத்துகள் நிலவுவதால், எது சரி என்று தெரியாமல் என்னால் கருத்து தெரிவிக்க முடியாது" என்றார். இதனால் தவாக மீண்டும் திமுக கூட்டணியில் இணையுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications