சங்கீதாவால் வந்த சட்டச் சிக்கல்.. விஜய்யின் வேட்புமனு தள்ளுபடியாக வாய்ப்பு? வெளியான ஷாக் பின்னணி!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் களத்தில் இன்னொரு பரபரப்பு தற்போது தொற்றிக்கொண்டு உள்ளது.. அதன்படி தவெக தலைவர் விஜய்யின் வேட்ப்புமனு தள்ளுபடியாகலாம் என்கிற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
தனித்துப் போட்டியிடுவதில் தீவிரமாகவும் உறுதியாகவும் இருந்து வருகிறார் தவெக தலைவர் விஜய். ஆனால், அவரே தேர்தலில் நிற்க முடியுமா? என்கிற கேள்வி களை எழுப்புகின்றனர் திமுகவின் சட்டப் புலிகள். இந்த விவசயம் மெல்ல மெல்ல கசிந்து தற்போது விஜய்யையும் இந்த கேள்வி ஆக்ரமித்திருப்பதால், உச்சநீதிமன்றத் தின் சீனியர் வழக்கறிஞர்களிடம் விவாதிக்குமளவுக்கு மேட்டர் சீரியசாகி வருகிறது.

தேர்தல் வழக்குகளில் அனுபவம் பெற்ற திமுகவின் வழக்கறிஞர்கள் சிலரிடம் விசாரித்தபோது, ''இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வேட்புமனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு வேட்பாளரும், தங்களின் சொத்து விவரங்களை மறைக்கக் கூடாது.
விரிவாக விவரிக்கும் வகையில் தெளிவான ஒரு பிரமாணப் பத்திரத்தை (அஃபிடவிட்) கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும். விதிகளின்படி சட்டத் தேவை யாகும். அந்தப் பிரமாணப் பத்திரத்தில், தனது சொந்தப் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மட்டுமல்லாமல், தனது மனைவி, மகன்கள், மகள்கள் ஆகியோரின் பெயரில் இருக்கும் குழந்தைகளின் சொத்துக்கள், வங்கிக் கணக்கு இருப்புகள், வருமான வரி செலுத்திய விவரங்கள் என அனைத்தையும் வேட்பாளர் சமர்பிக்க வேண்டும்.
இதில் தவறுகள் இருக்கக்கூடாது. மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். இந்த அஃபிடவிட் தேர்தல் ஆணையத்தின் வெப்-சைட்டில் பதிவேற்றம் செய்யப்படும். ஏதேனும் தவறுகள் இருந்தாலோ மறைத்தாலோ, தவறான விபரங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலோ அதை கண்டறிந்து யாரேனும் கேள்வி எழுப்பினால், அந்த வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்படும். இதற்கான அதிகாரம் தேர்தல் அதிகாரிக்கு இருக்குறது.
தற்போது விஜய்க்கு எதிராக அவரது மனைவி டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போயிருக்கிறார். இந்த விவகாரம், விஜய்யின் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதில் ஒரு தடையாக மாறக்கூடும். ஏனெனில், அவரது பெயரில் என்ன சொத்துக்கள் இருக்கிறது? வங்கி இருப்புகள் எவ்வளவு? கடன்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளுக்கு விஜய்யிடம் தெளிவான பதில்கள் இருக்கிறதா? என தெரியவில்லை. காரணம், விஜய்யும் அவரது மனைவியும் பல வருடங்களாக பிரிந்து இருக்கிறார்கள்.
இந்த காலக்கட்டத்தில் அவர் ஏதேனும் தனது பெயரிலோ, தனது குழந்தைகளின் பெயரிலோ சொத்துக்கள் வாங்கினாரா? கடன்கள் வாங்கினாரா? வெளி நாடுகளில் ஏதேனும் முதலீடுகள் செய்துள்ளரா? என்பது போன்ற விபரங்கள் விஜய்க்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால், அவரது மனைவிடம் விஜய் ஆலோசித்தால் தான் உண்மையான விபரங்களை தனது வேட்புமனுவில் தெரிவிக்க முடியும்.
அப்படி ஆலோசிக்கும் அளவுக்கு சூழல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், விஜய்யின் வேட்புமனு, இது குறித்த சட்டச் சிக்கல்களை உருவாக்கக் கூடும். அதனால் அவரது வேட்புமனுத் தாக்கலை எங்களுடைய சீனியர் லாயர்கள் உற்று கவனிப்பார்கள். இது தொடர்பாக, பல ஆலோசனைகளும் நடந்து கொண்டிருக்கிறது'' என்று கூறுகின்றனர்.
இந்த விவகாரம் தற்போது விஜய்க்கும் தெரிய வந்திருப்பதால், இதனை எப்படி சமாளிப்பது? மனைவியை விட்டு பல வருடங்களாக பிரிந்து இருப்பதால், புதிதாக அவர் வாங்கிய சொத்து விபரங்கள், கடன் விபரங்களை என்னால் தெரிவிக்க இயலாது என சொல்வதற்கு சட்டவிதிகள் அனுமதிக்கிறதா? என்றெல்லாம் சீனியர் வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறாராம் விஜய்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications