சின்னாபின்னம் ஆகிடுச்சு.. இப்படி பண்ணிட்டீங்களே.. புஸ்ஸி, ஜானை கூப்பிட்டு கத்திய விஜய்? என்ன நடந்தது
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஜான் ஆரோக்கியசாமியை கடுமையாக கண்டித்து உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இருவரையும் தனி தனியாக அழைத்து விஜய் பேசி இருக்கிறார். புஸ்ஸி ஆனந்திடம் பேசிய விஜய், நீங்கள் செய்வது சரியல்ல. கட்சி பொதுச்செயலாராக நீங்கள் என்ன செய்தீர்கள்? கூட்டம் கூட்டுவதை தவிர வேறு என்ன செய்தீர்கள்? கட்சி பொறுப்புகளுக்கு கூட நிர்வாகிகள் போடவில்லை. பல பொறுப்புகள் காலியாக இருக்கின்றன.

புஸ்ஸி மீது பாய்ந்த விஜய்
நீண்ட காலம் தொண்டர்களாக இருந்தவர்களுக்கு பொறுப்புகள் இல்லை. பல பிரிவுகள் உருவாக்கப்படாமல் உள்ளது. நிலைமை மோசமாக உள்ளது. ஆனால் ஒரு கேஸ் என்றதும் தலைமறைவாகிவிட்டீர்கள். அப்படியே காணாமல் போய்விட்டீர்கள். நான் கூட பனையூர் வீட்டில் தானே இருந்தேன். கைது நடந்தால் பார்க்கலாம் என்று தானே இருந்தேன்.
வீட்டிற்கு வாங்க என்று போலீசுக்கே சவால் விட்டேனே.. ஆனால் நீங்கள் ஏன் காணாமல் போனீர்கள்? இதுதான் கட்சி நிர்வாகிகள் செய்யும் செயலா? அதுவும் பொதுச்செயலாளர் செய்யும் செயலா? இப்போது சோஷியல் மீடியாவில் சண்டை போட்டுகொண்டு இருக்கிறீர்கள்.. நீங்கள் செய்தது.. செய்வது எதுவும் சரியில்ல என்று விஜய் கோபம் அடைந்து உள்ளார்.
ஜான் ஆரோக்கியசாமி விஜய் கோபம்
அதேபோல் ஜான் ஆரோக்கியசாமி மீது கோபம் அடைந்த விஜய், நீங்கள் எனக்கு ஆலோசனை என்ற பெயரில் தவறான வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளீர்கள். மோசமான வழிகாட்டுதல்களை கொடுத்து இருக்கிறீர்கள்! கரூரில் முன்கூட்டியே கூட்டம் நடத்த ஐடியா கொடுத்தது நீங்கள்? அங்கே என்னை தாமதமாக செல்ல திட்டமிட்டது நீங்கள்
அதன்பின் என்னை கரூரில் இருந்து உடனே கிளம்ப சொன்னது நீங்கள். நான் மீண்டும் கரூர் போக வேண்டாம் என்று சொன்னது நீங்கள். இந்த ஐடியா எல்லாம் உங்களுக்கு யார் கொடுக்கிறார்கள்? எந்த ரிப்போர்ட் அடிப்படையில் நீங்கள் பேசுகிறீர்கள். எனக்கு உயிருக்கு ஆபத்து உள்ளது கரூர் போக வேண்டாம் என்று சொன்னீர்களே.. சொல்லுங்கள்.. அதை எதன் அடிப்படையில் சொன்னீர்கள்.. உங்களால் கட்சி நடவடிக்கைகள் சின்னாபின்னம் ஆகிடுச்சு.. இப்படி பண்ணிட்டீங்களே.. என்று விஜய் கோபமாக கூறி உள்ளார்.
உட்கட்சி மோதல்
இதுபோக இன்னொரு பக்கம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) கடுமையான உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து உள்ளது. கட்சியின் முக்கிய தலைவர்களான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் ஆதரவாளர்கள் இடையே மோதல்கள் எழுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சிக்குள் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடுகள் இப்போது பகிரங்கமான போட்டியாக மாறி, இரு தரப்பு ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் மோதிக்கொள்கின்றனர் என்று கூறப்படுகிறது. ஒருவரை நீக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பும்.. இவரை நீக்க வேண்டும் என்று அவரின் தரப்பினரும் மாறி மாறி போஸ்ட் செய்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழக வட்டார தகவல்கள்
கட்சி வட்டாரங்களின்படி, ஆனந்த் மற்றும் அர்ஜுனா இடையேயான இந்த மோதல் பல வாரங்களாகவே புகைந்துகொண்டிருக்கிறது. இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்பு மற்றும் பரப்புரை வியூகங்களை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஆனால், கட்டுப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் தொடர்பான வேறுபாடுகளே இந்த மோதலுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. முக்கியமாக கரூர் விவாகரத்திற்கு பின் இவர்கள் இடையே கருத்து வேறுபாடு உச்சம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது












Click it and Unblock the Notifications