டெல்லி கையில் விஜய்.. உற்சாகத்தில் எடப்பாடி! இனி துணை முதல்வர் பதவி கூட கேட்க முடியாதாமே.. போச்சு
சென்னை: கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்க இருப்பது விஜய்க்கு சாதகமாக இருக்கும் என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் பலர் நம்புகின்றனர். ஆனால் விஜய்க்கு அரசியல் ரீதியாக இது கடுமையான நெருக்கடியை கொடுக்கலாம்.
முக்கியமாக விஜய்க்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமியின் வியூகம், அரசியல் அழுத்தம் அதிகரிக்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

1. கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
2. விஜய்யின் தவெக கட்சியினர் தமிழக அரசின் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் SIT அமைத்ததை எதிர்த்தனர். இந்த நிலையில்தான் சிபிஐ அறிவிப்பை அவர்கள் வரவேற்கிறார்கள்.
3. ஆனால் அரசியல் ரீதியாக விஜய்க்கு இது நெருக்கடியை கொடுக்கும். முக்கியமாக டெல்லி கட்டுப்பாட்டில் அதிகார ரீதியாக அவர் வர வேண்டி இருக்கும் .
4. பல மாநிலங்களில் சிபிஐ, அமலாக்கத்துறையை வைத்து டெல்லி அரசியல் செய்கிறது, மாநில சக்திகளை ஓடுகிறது என்று புகார் உள்ளது.
5. அந்த அழுத்தத்திற்குள் தற்போது விஜயும் வந்துள்ளார். இது ஒருவகையில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக மாறும்.
6. தமிழ்நாட்டில் தனது கால்தடத்தை வலுப்படுத்தும் நோக்கில், பாஜக அண்மையில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன. கடைசியாக டெல்லியில் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. விரைவில் இடப்பங்கீடு தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. விஜய் - அதிமுக இடையே கூட்டணி அமைவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது. அதாவது பாஜக கூட்டணியில் அதிமுக, தவெக இரண்டும் இருக்கும். பாஜக 40 இடங்கள், தவெக 50 இடங்கள் மீதம் உள்ள இடங்களில் அதிமுக போட்டியிடும். விஜய் துணை முதல்வராக முன்னிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
7. இப்போது சிபிஐ வழக்கை காரணம் காட்டி விஜயை கூட்டணிக்கு வரச்சொல்லி எடப்பாடி பிரஷர் கொடுக்கலாம். டெல்லியில் தனக்கு உள்ள ஆதரவை எடப்பாடி - பாஜக விஜய்க்கு எதிராக பயன்படுத்தலாம். ஏற்கனவே விஜய்க்கு எதிராக வருமான வரி வழக்கை ஐடித்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
8. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 40+ இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி கொடுக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே சமயம் விஜய் தரப்பு எடப்பாடி பழனிசாமியிடம் குறைந்தது 4-5 அமைச்சர்கள் பதவியாவது வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் அதிமுக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது இப்போது சிபிஐ வழக்கை காரணம் காட்டி விஜய்க்கு எடப்பாடி பிரஷர் போடலாம்.. இது போன்ற பதவிகளை கொடுக்க முடியாது.. விஜயகாந்த் போல தேர்தல் நேர கூட்டணிக்கு மட்டும் வாருங்கள்.. அதிகார பகிர்வு எல்லாம் இருக்காது என்றும் விஜய்க்கு எடப்பாடி செக் வைக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் கிட்டத்தட்ட அரசியல் ரீதியாக விஜய்க்கு இப்போது செக் வைக்கப்பட்டு உள்ளது என்றே கூற வேண்டும்.












Click it and Unblock the Notifications