அன்பின் முழு உருவம்.. அன்னையரை இன்று மட்டுமல்ல எந்நாளும் வணங்குவோம்.. நடிகர் விஜய் வாழ்த்து!
சென்னை: அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் என்பது உலகின் அனைத்து தாய்மார்களையும் போற்றி வணங்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.

நம் வாழ்வில் தாயின் அன்பு என்பது, ஈடு இணை இல்லாதது, கைம்மாறு கருதாதது. தாயின் அன்புக்கு நம்மால் ஒருபோதும் ஈடு செலுத்தவே முடியாது. அந்தவகையில், சர்வதேச அன்னையர் தினம், நம் அன்னையின் மீதான அன்பை சிறப்பான முறையில் வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது.
'அம்மா’ என்றால் அன்பு.. அன்னையர் தினம் கொண்டாடப்படுவதன் வரலாறு தெரியுமா? இந்த 2 பெண்கள் தான் காரணம்!
அன்னையர் தினத்தையொட்டி, உலக மக்கள் தங்கள் அன்னையருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தும், பரிசுப் பொருட்கள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். தாய்மார்கள் தன்னலமின்றி வழங்கும் அன்பையும் ஆதரவையும் கொண்டாடும் நாள் இது என்றால் மிகையில்லை.
சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்கள் பலரும் அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய்யும் அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பின் முழு உருவமாய் திகழ்ந்து, குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையரை இன்று மட்டுமல்ல எந்நாளும் போற்றி வணங்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
-
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி!












Click it and Unblock the Notifications