அதிமுக, நாம் தமிழர் செய்யாத சம்பவம்.. சைலண்ட்டா விஜய் செஞ்சிட்டாரே.. பேரணி நாளில்.. ரிலீஸ் ஆன லிஸ்ட்
சென்னை: போலீஸ் கஸ்டடி மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இன்று மேடை ஏற்றினர். தவெக பேரணியில் இவர்கள் மேடை ஏற்றப்பட்டதோடு.. பாதிக்கப்பட்டவர்களின் லிஸ்ட் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் கஸ்டடி மரணங்கள் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக சிவகங்கை திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரணம் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த மரண வழக்கினை சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் காவலர்கள் என்பதால் வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட காவலர்கள் 5 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் மரண வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் செய்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதன் அடிப்படையில் 5 போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இதே விவகாரத்தில் விஜய் தரப்பு பேரணி செல்கிறது.
விஜய் பக்கா மூவ்
இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று போலீஸ் கஸ்டடி மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இன்று மேடை ஏற்றினர். தவெக பேரணியில் இவர்கள் மேடை ஏற்றப்பட்டதோடு.. பாதிக்கப்பட்டவர்களின் லிஸ்ட் வெளியிடப்பட்டது. 24 குடும்பங்களின் பெயர்களை விஜய் வெளியிட்டு உள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இதை செய்திருக்க வேண்டும். ஆனால் அதிமுக இந்த வாய்ப்பை தவறவிட்டது. அதோடு 14 வருடமாக கட்சி நடத்தும் நாம் தமிழர் கட்சி இதே விவகாரத்தில் போராட்டங்களை நடத்தவில்லை. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் இதே விவகாரத்தை கையில் எடுத்ததோடு இல்லாமல் - பாதிக்கப்பட்ட குடும்பங்களை மேடை ஏற்றி உள்ளனர்.
TVK Chief Vijay stages a protest demanding justice for custodial violence victims along with their family members. #CustodialDeath #CustodialViolence pic.twitter.com/ljTLx8IGzz
— Shabbir Ahmed (@Ahmedshabbir20) July 13, 2025
தமிழக வெற்றிக் கழக போராட்டம்
இந்தப் பேரணியையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் தனிப்படை போலீசாரால் விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தவெக போராட்டம் நடத்த அனுமதி கோரிய நாளில் அந்த இடம் வேறு காரணத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆகையால், ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு காவல்துறையினரிடம் தவெகவினர் அனுமதி கோரிய நிலையில், அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் சென்னை கமிஷனர் அருண் இதை மறுத்து இருந்தார்.

இதையடுத்து, சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினரை அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக தரப்பில் மனு அளித்தனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்ட நிலையில், நீதிபதி வேல்முருகன் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூலை 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், தவெக போராட்டத்துக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று தவெக மூலம் மிகப்பெரிய பேரணி சென்னை சிவானந்தா சாலையில் நடத்தப்படுகிறது.
#DMKSocialinjusticeGovt pic.twitter.com/x3fBHaDszv
— தமிழக வெற்றிக் கழகம் IT WING (@Tvk_ITWING_) July 13, 2025
விஜய் நேரடியாக கலந்து கொள்ளும் முதல் பேரணியாக இது இருக்க உள்ளது. இதனால் கடுமையான ஏற்பாடுகள் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. கட்சி நிர்வாகிகள், ரசிகர்களுக்கும் முக்கியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. சுமார் 10 ஆயிரம் பேர் பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர். அஜித் குமார் மறைவிற்கு நீதி வேண்டி பேரணி நடத்த உள்ளார் விஜய். ஏற்கனவே லாக் அப் மரணங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பங்கேற்க உள்ளன.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications