தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர்
சென்னை: மனைவி, மகளை வீட்டில் இருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா கொண்டாடுவதா என்று தவெக தலைவர் விஜய்க்கு இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பி இருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக் கொண்டு இருப்பதாக கூறியுள்ள அமீர், தவெக நடத்தும் மகளிர் தின விழா ஒரு கேவலமான நிகழ்ச்சி என்றும் சாடியுள்ளார்.
தவெக சார்பாக இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் அக்கட்சியின் தலைவர் விஜய் சட்டசபை தேர்தலில் மகளிருக்கான வாக்குறுதிகள் மற்றும் திட்டங்களை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தவெகவினர் உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.

இதனிடையே தவெக நடத்தின மகளிர் தின விழா ஒரு கேவலமான நிகழ்ச்சி என்று இயக்குநர் அமீர் சாடியுள்ளார். அண்மையில் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் தவெக தலைவர் விஜய் 2021ஆம் ஆண்டு முதலே நடிகை ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.
அந்த நடிகையுடனான உறவை முறித்துக் கொள்வதாக உறுதி கொடுத்த போதும், மீண்டும் தொடர்ந்து வருவதாக சங்கீதா கூறி இருந்தார். அதேபோல் அந்த நடிகையும் தொடர்ச்சியாக விஜய்யுடன் எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதால், தானும் தனது மகன், மகளும் சொல்ல முடியாத துயரத்தில் இருப்பதாகவும் கூறி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் கள்ளத்தொடர்பு குறித்து விஜய்யிடம் கேட்டதால், தன்னை பொருளாதார ரீதியாக துன்புறுத்தியதாகவும், வீட்டை விட்டு எங்கும் வெளியில் செல்ல முடியாதபடி சிக்கலை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார். இது தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியான சூழலில் கல்பாத்தி குடும்ப திருமண நிகழ்ச்சியில் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரும் இணைந்து பங்கேற்றனர்.
விஜய் மற்றும் திரிஷா ஒரே காரில் வந்ததோடு, ஒரே நிறத்தில் ஆடை அணிந்து தம்பதிகளை ஒன்றாக சென்று வாழ்த்தினர். இது தவெகவினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் விஜய்யையும் கடுமையாக சாடினர். இந்த நிலையில் தவெக நடத்தவுள்ள மகளிர் தின விழாவை இயக்குநர் அமீர் கடுமையாக சாடி இருக்கிறார்.
இயக்குநர் அமீர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்திருக்கிறார். அதில், மனைவி, மகள் இருவரையும் வீட்டில் இருந்து வீட்டில் இருந்து விரட்டி விட்டு மகளிர் தின விழா எனும் கேவலமான அரசியல் நிகழ்ச்சி.. தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக் கொண்டிருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். இது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications