5 மணி முதல் காத்திருந்த மக்கள்.. அழுத்தம் இல்லாத சிறிய உரைதான்! சொந்த கட்சியிலேயே கேமியோ தரும் விஜய்
சென்னை: சினிமாக்களில் ஒரு சில கதாபாத்திரங்கள் சில நிமிடங்கள் மட்டும் வரும். பெரிய நடிகர் யாராவது இப்படி கேமியோ செய்தால் அது கவனம் பெறும். ஆனால் அந்த கேமியோக்கள் வந்த வேகத்தில் சென்றுவிடும்.. அப்படி ஒரு கேமியோவைத்தான் தவெக கட்சியில் செய்து வருகிறார் விஜய். ஆனால் அந்த கேமியோ கூட பெரிய அளவில் தாக்கம் இல்லாத கேமியோவாக இருக்கிறது.
விஜய் தவெக கட்சியை தொடங்கியதில் இருந்தே பெரிதாக எதுவும் அழுத்தம் தரக்கூடிய வகையில் பேசவில்லை. கரூரில் 41 பேரை பலி கொண்ட கூட்டத்தில் கூட விஜய் 20 நிமிடம்தான் பேசினார். அதிலும் கூட பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாடினாரே தவிர விஜய் அழுத்தமாக எதையும் பேசவில்லை.
புதுச்சேரியில் இன்று பெரிய கூட்டம் நடத்த அனுமதி கேட்டார். ரோடு ஷோ நடத்த 3 முறை அனுமதி கேட்டார். இப்படி எல்லாம் அனுமதி கேட்ட விஜய் பெரிதாக எதோ பேச போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதையும் பேசாமல் விஜய் அப்படியே புஸ்ஸ்ஸ் என்று ஆகிவிட்டது என்று சொல்லும் அளவிற்கு தனது பேச்சில் சொதப்பி இருக்கிறார்.

1. காலை 5 மணி முதல் மக்கள் காத்திருந்தும் 14 நிமிடங்கள்தான் விஜய் பேசியுள்ளார். அதிலும் புதுச்சேரி மகிமைகளை கொஞ்சம் கூறிவிட்டு, என்ஆர் காங்கிரஸ் அரசுக்கு நன்றி கூறி விட்டு அவர் அரசியல் என்று பேசியது 10 நிமிடங்கள்தான்.
2. இந்த முறையும் வழக்கம்போல சிறிய உரைதான். அவரின் பேச்சும் அரசியல் ரீதியாக ஆழமில்லாத உரைதான்.
3. புதுச்சேரி போய் அங்கே ஆட்சியில் இல்லாத திமுகவை விமர்சனம் செய்த விஜய், பாஜக என்ற பெயரை கூட சொல்லவில்லை. ஒன்றிய அரசு என்ற விஜய் பாஜகவை பற்றி பேசவே இல்லை.
4. கிட்டத்தட்ட..இந்த கூட்டமே பாருங்கள் நாங்கள் பாதுகாப்பாக கூட்டம் நடத்துகிறோம். தமிழ்நாட்டில்தான் பாதுகாப்பு இல்லை என்று சொல்லிக்காட்டுவதற்காக நடத்தப்பட்ட கூட்டம் போல இருந்தது. அதே பாயிண்டை மட்டும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, விஜய் என்று எல்லோரும் மாறி மாறி சொன்னார்கள்.
5 . இதை தாண்டி திருப்பரங்குன்றம் பற்றி பேசவில்லை, கோவை, மதுரை மெட்ரோ பற்றி பேசவில்லை, நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பற்றி பேசவில்லை, SIR பற்றி பேசவில்லை. இப்படி முக்கியமான விஷயம் எதையும் பற்றி பேசவில்லை.
புதுச்சேரி விஜய் பேச்சு
இன்று விஜய் தனது பேச்சில், நெஞ்சில் குடியிருக்கும். தமிழ்நாடும், புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாம் ஒன்றுதான். புதுச்சேரி என்றாலே நியாபகத்துக்கு வருவது மணக்குள விநாயகர், வில்லியனூர் மாதா.
மகாகவி பாரதியார் இருந்த மண், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த மண் . புதுச்சேரியும் தமிழகமும் ஒன்றுதான். ஒன்றிய அரசுதான் தமிழகம் புதுச்சேரி என பிரித்து பார்க்கிறது. வேறு வேறு ஊரில் வேறு வேறு வீட்டில் இருந்தாலும் நாமெல்லாம் ஒன்றுதான். உலகின் எந்த மூலையில் எங்கு நம் வகையறா இருந்தாலும் நம் உயிர் தான்.
தமிழ்நாட்டை போலவே 30 ஆண்டுகளாக என்னை புதுச்சேரி மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள்.. புதுச்சேரி மக்களுக்காகவும் சேர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன்.. புதுச்சேரி அரசு தமிழக அரசு போல் அல்ல: புதுச்சேரி அரசு பாரபட்சம் பார்க்காமல் பாதுகாப்பு கொடுத்துள்ளார்கள். தமிழ்நாடு அப்படி இல்லை- இதை பார்த்தாவது திமுக அரசு கற்க வேண்டும்
தமிழ்நாட்டை போலவே 30 ஆண்டுகளாக எனக்கு புதுச்சேரி மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள்.. புதுச்சேரி மக்களுக்காகவும் சேர்த்து நிச்சயம் குரல் கொடுப்பேன்.. புதுச்சேரி அரசு தமிழக அரசு போல் அல்ல: புதுச்சேரி அரசைப் பார்த்தாவது தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே பாஜகவுக்கு இல்லை. புதுச்சேரி அரசின் மாநில அந்தஸ்து தீர்மானம் என்ன ஆனது? என்று விஜய் பேச்சில் குறிப்பிட்டு உள்ளார்.
-
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
மத்திய அரசுடன் மோதலைத் தவிர்க்கும் விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. விட்டுக்கொடுக்க முடிவு! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு











Click it and Unblock the Notifications