தவெக அரங்கில் ஒலித்த பராசக்தி ஹீரோ கதை.. ராசேந்திரனின் தியாகத்தை விஜய் முன் சொன்ன நாஞ்சில் சம்பத்!
சென்னை: பராசக்தி படத்தில் அதர்வா நடித்த இராசேந்திரன் கதாபாத்திரத்தின் கதையை தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியின் நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார். இராசேந்திரனின் கதையை கேட்ட விஜய் உணர்ச்சிப்பெருக்குடன் அமர்ந்திருந்ததோடு, நாஞ்சில் சம்பத்திற்கு எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தார்.
அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மொழிப் போரில் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராசேந்திரனின் கதையை வைத்து பராசக்தி படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தி திணிப்புக்கு எதிரான கோஷத்தை தமிழ்நாடு முழுக்க இந்தப் படம் கொண்டு போனது என்றே சொல்லலாம்.

ஆனால் பராசக்தி படத்தை இன்பன் உதயநிதி ரிலீஸ் செய்ததால், விஜய் ரசிகர்கள் அந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் ஜனநாயகன் படத்துடன் பராசக்தி படம் வெளியானதால், தவெக தொண்டர்களும் கொந்தளித்தனர். இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகி நாஞ்சில் சம்பத் பேசுகையில், மொழி என்பது என்னுடைய முகம். என் முகத்தில் அடுத்தவன் முகவரியை எழுத முடியாது. மொழி என்னுடைய கலாச்சாரத்தை காக்கும் கவன், இந்த கவசத்தை ஒருநாளும் கழற்றி எறிந்துவிட முடியாது.
மொழி என் உயிர்.. அதனை எந்தக் காலத்திலும் இழக்க முடியாது. பாகிஸ்தான் விடுதலை பெற்ற கிழக்கு பாகிஸ்தானுக்கு அதிபர் முகமது அலி ஜின்னா சென்றார். அப்போது வங்க மொழியில் பேசாமல் உருது மொழியில் பேசிய ஜின்னாவை எதிர்த்து குரல் கொடுத்தவர் முஜீபுர் ரஹ்மான். அவரை கூட்டத்தில் இருந்து தூக்கி எறிந்தார்கள். பின்னொரு நாளில் வங்கதேசத்தின் முதல் பிரதமராக வந்தவர் முஜீபுர் ரஹ்மான்.
எனவே சாதி, மதம் மனிதனை ஒன்றிணைக்காது. மொழி மட்டுமே மனிதனை ஒன்றிணைக்கும். தமிழ்நாட்டில் துறையூரில் இருந்து சென்னை வரை இந்தி திணிப்புக்கு எதிராக நடைபயணம் வந்தார் அழகிரி சாமி. தமிழர்களுக்கு மட்டுமே உரிமை உள்ள போர் மொழிப்போர். நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை மட்டுமே எதிர்க்கிறோம். இந்தி என்பது அநீதி, ஆதிக்கம், மனுதர்மத்தின் சின்னம்.
இந்த மொழிக்காக பலரும் உயிரை துறந்தார்கள். சென்னைச் சிறைசாலையில் தாளமுத்து, நடராசன் உயிர் துறந்தார். கீழப்பழுவூர் சின்னச்சாமி அண்ணாவின் சிலையுடன் தீக்குளித்து ஆதிக்க இந்தி வீழ்க, அன்னை தமிழ் வாழ்க என்று சூளுரைத்தார். அரங்கநாதன், ஆரோக்கியசாமி, வீரப்பன், சண்முகம், முத்து என்று தமிழுக்காக உயிர் துறந்தார்கள்.
சிவகங்கையில் பிறந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர் இராசேந்திரன் இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் நடந்து வந்த போது, காவல்துறை துப்பாக்கியால் சுட்டது. அந்த மொழிப்போர் தியாகிகளை நாம் கொண்டாடுகிறோம். சேனை ஒன்று தேவை, செந்தமிழ் காக்க சேனை ஒன்று தேவை என்று பாரதிதாசன் பாடினார் என்று பேசியுள்ளார்.
நாஞ்சில் சம்பத்தின் பேச்சை அமைதியாக கேட்ட தவெக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். அதேபோல் விஜய்யும் உணர்ச்சிப் பெருக்குடன் அமர்ந்திருந்தார். பின்னர் நாஞ்சில் சம்பத் பேச்சை முடித்து எழுந்து சென்ற போது, விஜய் உட்பட அத்தனை தலைவர்களும் எழுந்து அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications