பிப்ரவரி 8ல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்.. வேலூரில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிப்ரவரி 8ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் வேலூரில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அகரம்சேரியில் பிரம்மாண்ட மைதானம் தேர்வு செய்யப்பட்டு, காவல்துறை மேற்பார்வையில் ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக மைதானத்தை சமன்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தவெக தொண்டர்கள் ஆர்வம் காட்டி வந்தாலும், தவெக தலைவர் விஜய் இன்னும் வீட்டில் இருந்தவாறே அரசியல் மேற்கொண்டு வருகிறார். கடைசியாக ஈரோடு மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பின் விஜய் மக்களை எங்கும் சந்திக்கவே இல்லை.

TVK Vijay

கிறிஸ்துமஸ் விழா மற்றும் தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் மட்டுமே விஜய் பங்கேற்றுள்ளார். ஏற்கனவே தவெக எதிர்பார்த்ததை போல் காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணையவில்லை. இதனை தவெக செயல் வீரர்கள் கூட்டத்திலேயே விஜய்யும் சூசகமாக அறிவித்துவிட்டார். இதனால் தேர்தலில் செலவு செய்வதற்கு தவெகவினர் பலரும் தயக்கம் காட்ட தொடங்கியுள்ளனர்.

இதனால் விஜய் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் தவெகவின் 3வது ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடக்கவுள்ளது. இதன்பின் விஜய் உடனடியாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். ஏற்கனவே தேர்தல் பிரச்சாரப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் பிப்ரவரி 8ஆம் தேதி வேலூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது தெரிய வந்துள்ளது. இதற்காக ஏற்கனவே காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம் அளிக்கப்பட்டிருக்கிறது. வேலூர் அருகே அகரம்சேரியில் உள்ள பிரம்மாண்ட மைதானத்தில் தவெக பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது.

தற்போது இந்த மைதானத்தில் காவல்துறை மேற்பார்வையில் 7 ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக சமன்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் விஜய் இனி ஒவ்வொரு வாரமும் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிகிறது. ஏற்கனவே சேலம் மாவட்டத்திலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இனி விஜய் ஒவ்வொரு மாவட்டமாக பயணிப்பார் என்று அக்கட்சியினர் கூறத் தொடங்கியுள்ளனர். தவெகவுக்கு 15 சதவிகிதம் வரை வாக்குகள் கிடைக்கும் என்று அண்மையில் இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது விஜய் பிரச்சாரம் மேற்கொண்டால், இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+