தவறு மேல் தவறு செய்த விஜய்.. இனி விஜய்க்கு ஆளுநரே நேரம் தரமாட்டார்.. மொத்தமாக சோலி முடிஞ்சது!
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியமைக்கும் கனவு, ஆளுநர் மாளிகையின் அதிருப்தியால் கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு போலி கடித புகார் மற்றும் வீடியோ ஆதாரங்கள் சிக்கியதைத் தொடர்ந்து, விஜய் தரப்பை இனி ஆளுநர் நேரில் சந்திக்க வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளுநர் மாளிகையின் மாண்பு சிதைக்கப்பட்டதா?
அரசியலமைப்பின் படி ஒரு மாநிலத்தின் மிக உயர்ந்த அதிகாரம் கொண்ட அலுவலகம் ஆளுநர் மாளிகை. அங்கு சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு ஆவணமும் சட்டப்பூர்வமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டியது ஒரு அரசியல் கட்சியின் அடிப்படைப் பொறுப்பு. ஆனால், 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாக விஜய் தரப்பு அளித்த கடிதத்தில், அ.ம.மு.க-வின் மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜின் பெயர் இடம்பெற்றிருந்தது மிகப்பெரிய தவறு என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
"ஆளுநர் மாளிகை போன்ற அரசியலமைப்பு பதவி இடத்தில் கொடுக்கப்படும் கடிதத்தில் இவ்வளவு பெரிய குளறுபடிகள் நேரவே கூடாது. இது ஆளுநரை ஏமாற்றும் செயல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பையே கேலிக்குள்ளாக்குவது போன்றது" என மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
வசமாகச் சிக்க வைத்த வீடியோ ஆதாரம்
இந்த விவகாரத்தில் விஜய் தரப்பிற்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது அவர்கள் வெளியிட்ட ஒரு வீடியோ தான். நேற்று மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்தித்த விஜய், தனக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், இந்த உரிமை கோரலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளின் ஆதரவு கடிதங்கள் இடம்பெறவில்லை. ஆனால் இருப்பதாக கூறி 120 எம்எல்ஏக்கள் ஆதரவை காட்டி மெஜாரிட்டி கணக்கு காட்டி இருந்தார். மாறாக, அமமுகவின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரான மன்னார்குடி காமராஜின் ஆதரவு கடிதம் இணைக்கப்பட்டிருந்தது. இதுவே பெரும் சர்ச்சைக்குப் புள்ளியாக அமைந்தது.
நேற்று இரவு மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் டிடிவி தினகரன் ஆளுநரிடம் அதிரடி புகார் அளித்தார். இது குறித்து நள்ளிரவில் ஆளுநர் ஆர்.வி ஆர்லேகர் நேரில் சந்தித்து முறையிட்ட தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசினார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆளுநரிடம் அளித்த ஆதரவு கடிதத்தில் எம்.எல்.ஏ காமராஜின் கையெழுத்து இருந்ததாகவும், அதன் அசல் பிரதியை ஆளுநர் கேட்டபோது அவர்கள் அங்கிருந்து கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஆளுநர் மாளிகையிலிருந்து எம்.எல்.ஏ காமராஜுக்கு நேரடியாகத் தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. "நீங்கள் ஆதரவு கடிதம் கொடுத்தீர்களா?" என்ற கேள்விக்கு, "நான் அப்படி எந்தக் கடிதமும் தரவில்லை, நேரில் வருகிறேன்" என்று கூறிவிட்டு காமராஜ் ஆளுநர் மாளிகைக்கு விரைந்தார். ஆளுநர் முன்னிலையில் ஆஜரான எம்.எல்.ஏ காமராஜ், "நான் அதிமுக கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறேன். விஜய்க்கு ஆதரவு அளிக்கவில்லை" என்று திட்டவட்டமா காமராஜ் தெரிவித்தார்.
இனி ஆளுநர் நேரம் தரமாட்டார்?
அதாவது டிடிவி ததினகரன் தனது அமமுக எம்எல்ஏ கடத்தப்பட்டுவிட்டதாக புகார் சொன்னார்.. அமமுக எம்எல்ஏ கையெழுத்து போடும் வீடியோவை தவெக வெளியிட்டது. இப்போது நான் கையெழுத்து போடவே இல்லை என்று அமமுக எம்எல்ஏ காமராஜ் மறுத்துவிட்டார்.
நடந்த நிகழ்வுகளால் அதிருப்தியில் இருக்கும் ஆளுநர், இனிமேல் இந்த விவகாரத்தில் விஜய் தரப்பை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கப் போவதில்லை என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "ஒருமுறை தவறு நடந்தால் அதைத் தற்செயல் எனலாம், ஆனால் ஆதாரங்களைச் சரிபார்க்காமல் உரிமை கோருவது ஆளுநரின் நேரத்தை வீணடிப்பதாகும்" என்பதே அவர்களின் நிலைப்பாடாக உள்ளது.
அடுத்த கட்டம் என்ன? உச்சநீதிமன்றமே தீர்வு!
தற்போதைய சூழலில், தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் ஒரு 'அரசியலமைப்பு முட்டுக்கட்டையாக' (Constitutional Deadlock) மாறியுள்ளது. குதிரை பேரம், கடத்தல் புகார் மற்றும் போலி கடித விவகாரம் எனப் புகார்கள் அடுக்கப்படுவதால், இந்த விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக எந்த முடிவும் எடுக்க மாட்டார் என்றே தெரிகிறது.
இனி இந்தப் பஞ்சாயத்தை உச்சநீதிமன்றம் தான் தீர்த்து வைக்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தரப்பிலோ அல்லது டிடிவி தினகரன் தரப்பிலோ நீதிமன்றத்தை நாடினால் மட்டுமே, இந்த அரசியல் குழப்பத்திற்கு ஒரு தெளிவான முடிவு கிடைக்கும். தமிழகத்தில் நிலவும் இந்த அராஜக சூழல் மற்றும் சட்ட ஒழுங்கு சிக்கல்கள் குறித்து ஆளுநர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மொத்தத்தில், ஒரே இரவில் ஏற்பட்ட இந்த அதிரடித் திருப்பங்கள் விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 'குதிரை பேரம்' என்ற முத்திரை குத்தப்பட்டுள்ள நிலையில், இதிலிருந்து விஜய் எப்படி மீளப்போகிறார் என்பதே தமிழக மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications