சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டலையா.. பொய் சொல்லாதீங்க விஜய்.. ஆதாரத்துடன் வந்த ராஜீவ் காந்தி!
சென்னை: சென்னை மாகாண முதல்வராக இருந்த சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி என்னவானது என்ற தவெக தலைவர் விஜய்யின் கேள்விக்கு திமுக பதிலடி கொடுத்துள்ளது. முன்னாள் முதல்வர் சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கிவிட்டதாக கூறியுள்ள திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி, தற்போது திறப்பு விழாவிற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் 3வது கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசுகையில், "தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா" நம்முடைய நாடி நரம்புகளில் ரத்தம் பாய்ச்சுகின்ற இந்த வரிகளை எழுதினது யார் என்று தெரியுமா..

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மேகனூரில் பிறந்த நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. தமிழ்நாட்டு மக்களுக்கு இட ஒதுக்கீடு உரிமையை வழங்கின இதே நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருச்செங்கோடு பகுதியில் இருக்கிற ஒருத்தர்.. நம்முடைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சுப்பராயன் தான். அந்த மாபெரும் மனிதர் தமிழக மக்களுக்கு இட ஒதுக்கீடு உரிமையை வழங்கினதில் இவருக்கு மிகப்பெரிய பங்குண்டு.
அதுதான் கம்யூனல் ஜிஓ 1071. அதைக் கொண்டு வந்து பட்டியிலன மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் வழங்கினார். அவர் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அவர் செய்த மிகப்பெரிய செயல். தமிழர் அப்படி பெருமையோடு சொல்றது மட்டுமல்லாமல் இதை நாமக்கல் மாவட்டத்தில் அவருக்கு என்று மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி எண் 456 கொடுத்தது யாரு? சொன்னார்களே செய்தார்களா.. என்று கேட்டார்.
அதற்கு தவெக தொண்டர்கள் இல்லை என்று பதில் அளித்தனர். இந்த நிலையில் திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்த் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ராஜீவ் காந்த் தனது எக்ஸ் பக்கத்தில், விஜய்.. கொஞ்சம் பொய் பேசுவதை நிறுத்துயா.. பொய்.. பொய்யா பேச வேண்டியது! சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப.சுப்பராயன் அவர்களுக்கு நாமக்கலில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என 'கீச்சி' ட்டுள்ளார்..
யோவ் @actorvijay பொய் பேசுவதை நிறுத்தியா…
— R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். (@rajiv_dmk) September 27, 2025
பொய்.. பொய்யா பேச வேண்டியது!!!🤦🏻🤦🏻
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப.சுப்பராயன் அவர்களுக்கு நாமக்கலில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என ‘கீச்சி’ ட்டுள்ளார்…
கடந்த 2024 மே மாதம்… pic.twitter.com/b5dKbwsJOG
கடந்த 2024 மே மாதம் நாமக்கல் மாவட்டம், தோட்டக்கூர்பட்டி கிராமத்தில் ப.சுப்பராயன் அவர்களுக்கு நினைவரங்கம் கட்டும் பணியை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கடந்த ஓராண்டாக இதன் கட்டுமானப் பணி நடந்து வந்த நிலையில், தற்போது பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அதன் புகைப்படங்களையும் இணைத்து பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications