விஜயோடு வாக்கு வங்கி எவ்வளவு தெரியுமா? எடப்பாடிக்கு பெரிய சிக்கலே அவர்தான்! யார் சொல்றதுன்னு பாருங்க
சென்னை: தமிழக அரசியலில் விஜய் வேறு வருகிறார். அவர் அதிமுகவினரின் வாக்குகளை பிடிக்க வாய்ப்புள்ளது. சீமான் வளர்ந்து கொண்டு இருக்கிறார். அவர் வாக்கு வங்கி உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதேபோல் விஜய் வந்தால் அவருக்கு தொடக்கத்திலேயே 10 சதவிகிதம் வாக்கு வங்கி இருக்கும்., என்று மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
வரிசையாக 10 தோல்விகளில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. அதிமுகவின் செல்வாக்கு சரியும் நிலையில் அதிமுக மாஜி அமைச்சர்கள் 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

பேட்டி; இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பிரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அதிமுக ஒன்றாக இருந்தால் மட்டுமே வெல்ல முடியும். கள்ளக்குறிச்சி சாராய விஷயத்தை வைத்து எடப்பாடி அரசியல் செய்யலாம். ஏன் ஆம்ஸ்ட்ராங் விஷயத்தை வைத்து எடப்பாடி அரசியல் செய்யலாம். ஆனால் அதை தாண்டி வாக்கு எடுக்க முடியாது. எடப்பாடி அரசியல் செய்தால் வாக்கு வங்கி உயராது. கட்சி ஒன்றாக இருந்தால் மட்டுமே வாக்கு வங்கி உயரும். அது இல்லையே.
இப்படியே போனால் அதிமுக ஒன்றும் இல்லாமல் போயிடும். தமிழக அரசியலில் விஜய் வேறு வருகிறார். அவர் அதிமுகவினரின் வாக்குகளை பிடிக்க வாய்ப்புள்ளது. சீமான் வளர்ந்து கொண்டு இருக்கிறார். அவர் வாக்கு வங்கி உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதேபோல் விஜய் வந்தால் அவருக்கு தொடக்கத்திலேயே 10 சதவிகிதம் வாக்கு வங்கி இருக்கும். கொங்கு மண்டலத்தில் மட்டும்தான் அதிமுகவிற்கு கொஞ்சம் வாக்குகள் உள்ளது. லோக்சபா தேர்தலில் இங்கே மட்டுமே கொஞ்சம் வாக்குகளை எடுத்தனர்.
எதார்த்தத்தை எடப்பாடி உணர வேண்டும். எல்லோரும் ஒன்றாக இருந்தால் மட்டுமே அதிமுக சரியாக இருக்க முடியும். 2026 சட்டசபை தேர்தலுக்குள் எடப்பாடி இதை உணர வேண்டும். இல்லையென்றால் எடப்பாடிக்கு சிக்கல் ஏற்படும். அவர் நீக்கப்படுவார். அதிமுக புதிய உருவம் எடுக்கும். எடப்பாடி உடனே பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.
அதிமுக மோதல்; அவர் பொதுக்குழு உறுப்பினர்களிடம் அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். அவர்களுக்கு என்ன தேவை.. ஒருங்கிணைந்த அதிமுக தேவையா என்று விசாரிக்க வேண்டும். எவ்வளவு நாள் எடப்பாடி நான்தான் எல்லாம் என்று பேசிக்கொண்டு இருக்க முடியும். இடைநிலை தலைவர்கள் இதை புரிந்து கொண்டனர். வேலுமணி கூட இதை புரிந்து கொண்டார். அவரே தனியாக இருந்தது தப்பு என்றார்.
எடப்பாடியை மூத்த தலைவர்கள் சேர்ந்து நீக்கும் நிலை ஏற்படலாம். பாஜகவை விடுங்கள். அதை பற்றி யோசிக்க வேண்டாம். அதிமுகவின் உட்கட்சி வாக்குகள் நிலைக்க வேண்டும். கட்சியில் பிரச்சனைகள் இருக்க கூடாது என்றால் எடப்பாடி மற்றவர்களை ஏற்க வேண்டும். சசிகலா - ஓபிஎஸ் போன்றவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஓபிஎஸ் வந்தால் பாஜக அதிமுகவை அபகரிக்கும் என்கிறார்கள். எடப்பாடியே பாஜக ஆள்தான்.
எடப்பாடியே பாஜக பக்கம்தான் நிற்பார். இதனால் ஓ பன்னீர்செல்வம் வந்தால் பாஜக வந்துவிடும் என்றெல்லாம் சொல்ல முடியாது, என்று மூத்த பத்திரிக்கையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
