தவெக எம்எல்ஏக்களுக்கு தயாரான நட்சத்திர விடுதி.. ஆட்சியமைக்கும் வரை சென்னையில் தங்க வைக்க திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தவெக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. தவெகவின் இந்த வெற்றி நாடு முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்கள் சென்னை சென்றுள்ளனர். ஆட்சியமைக்கும் வரை அவர்களை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைப்பதற்கு தவெக தலைமை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தவெக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வென்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகள் தவெகவுக்கு கிடைக்காததால் தொங்கு சட்டசபை உருவாகியுள்ளது. பெரும்பான்மை பெறுவதற்கு தவெக என்ன செய்ய போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

TVK MLAs

தவெக அலுவலகம்

காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட்கள், விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவை தவெக கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையிலும் தவெக ஈடுபட்டு வருகிறது. தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதனால் தேர்தலுக்கு பிறகும் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரி தவெக தலைவர் விஜய் ஆளுநருக்கு இ மெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் தவெக வேட்பாளர்களை விஜய் சென்னை பனையூர் அலுவலகத்திற்கு வர சொல்லியிருந்தார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்கள் இன்று காலை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம் சென்றனர்.

நட்சத்திர விடுதியில் தங்குவது

வெற்றி சான்றிழ்களுடன் தவெகவினர் விஜய்யை சந்தித்து வாழ்த்த பெற்று வருகிறார்கள். தவெக மேற்கொள்ளவுள்ள அடுத்த கட்ட பணிகள் குறித்து விஜய் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தேர்தலின்போதே தவெக வேட்பாளர்கள் அதிமுக, திமுகவிடம் டீல் பேசியதாக புகார் எழுந்தது. எடப்பாடி தொகுதியில் தவெக அறிவித்த வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

ஆட்சியமைக்கும் வரை தவெக வேட்பாளர்களை, மற்ற கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி பிரச்னை வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். இதனால் சென்னை சென்றுள்ள தவெக எம்எல்ஏக்களை சென்னையிலேயே தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் எம்எல்ஏக்களை தங்கவைக்க திட்டமிட்டுள்ளனர். கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்சி அமைப்பதற்கு தாமதமாகலாம் என்பதால் தவெக இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+