பனையூர் வந்த 40 வேட்பாளர்கள்.. விஜய் கொடுத்த சீக்ரெட் மெசேஜ்.. தவெக செம குஷி
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் பலத்துடன் நிற்கிறார்கள். தவெக வருகை இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பனையூர் தவெக அலுவலகத்தில் விஜய் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். தேர்தல் முடிவுகள் தொடர்பாக பாசிட்டிவாக இருக்கும் விஜய், பல ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய ஆய்வுகளில் தவெகவுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்திருப்பதாக வரும் தகவலால் விஜய் உற்சாகமாகி வருகிறார். விஜய் வெளிநாடு செல்லவுள்ளார் என கூறப்பட்ட நிலையில், அவர் எங்கும் செல்லாமல் பனையூரிலே உள்ளார். கடந்த சில நாட்களாக பனையூர் தவெக அலுவலகத்திற்கு சென்ற அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் சென்று விஜயை சந்தித்து வருகிறார்கள்.

விஜய் செம ஹேப்பி
விஜய்யிடம் பேசிய நிர்வாகிகள், : தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளில் இருந்து வரும் தகவல்கள் மகிழ்ச்சியளிக்கிறது. நம்முடைய விசில் சின்னத்திற்கு ஒன்றரை கோடிக்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்திருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வருகின்றன. 140க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது.
ஆட்சியமைப்பது பற்றி நாம் ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது" என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு உற்சாகமான விஜய், "என் காதிற்கு வரும் தகவல்களும் அப்படித்தான் இருக்கின்றன. ஆனால் தேர்தல் முடிவுகள் வரும் வரை கட்சி தரப்பில் நாம் அமைதியாக இருக்க வேண்டும். மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சரியாக எண்ணுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்" என்று சொல்லியுள்ளார்.
40 வேட்பாளர்களுக்கு வகுப்பு
தவெகவின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா மற்றும் மாநில அளவில் வெற்றி வாய்ப்புள்ளதாக கருதப்படும் 40 வேட்பாளர்களை, சென்னையில் உள்ள பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து விஜய்யிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், "பனையூர் வந்த 40 வேட்பாளர்களுக்கு அலுவலகத்தில் வைத்து வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடியும் வரை, அனைத்து தொகுதிகளின் மின்னணு இயந்திரங்கள் வைத்துள்ள ஸ்ட்ராங் ரூமை பாதுகாக்க வேண்டும். பல இடங்களில் நிர்வாகிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை என்று தகவல் வருகிறது.
விஜய் கொடுத்த மெசேஜ்
பாதுகாப்பு குறைபாடுள்ள இடங்களில் அதை பலப்படுத்த வேண்டும். திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இதனால் வாக்குகள் பல முனைகளில் சிதறியுள்ளன. எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக தான் இருக்கும். வாக்கு எண்ணிக்கையில் உள்ள ஏஜென்ட்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
திமுக, அதிமுகவினர் தில்லு முல்லு நடவடிக்கையில் இறங்குவார்கள். கடந்த காலங்களில் பலர் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். அதன் பிறகு நீதிமன்றம் சென்றாலும் பலனளிக்காது. எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" விஜய் சார்பில் வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications