இன்னொரு உயிர் போயிடுச்சு.. அட்லி வீட்டில் இட்லியா முக்கியம்.. விஜய் மீது பி.டி.செல்வகுமார் விமர்சனம்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சியும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். தவெக ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகி நிற்கிறார்கள். நாட்டில் இவ்வளவு பிரச்சனை நிலவும்போது, அட்லி வீட்டில் இட்லி சாப்பிடுவதுதான் முக்கியமாக என்று பி.டி. செல்வகுமார் விஜய் மீது கடுமையான விமர்சனம் வைத்துள்ளார்.
விஜய்யின் முன்னாள் உதவியாளரும், திமுக நிர்வாகியுமான பி.டி செல்வகுமார் திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கரூர் சம்பவம் உங்கள் எல்லோருக்கும் தெரியும். 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் அதை விபத்து என்கிறார்கள். என்னை பொறுத்தவரை அது கொலை. அதுவும் திட்டமிட்ட கொலை.

19 வயது மாணவன் உயிரிழப்பு
வேண்டுமென்றே நேரத்தை தாமதப்படுத்தி வெயிலில் சங்கிலி வளையம் போட்டு நிற்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அதற்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 41 பேர் இறந்ததற்கு இன்று வரை உரிய பதில் சொல்லாமல் அடுத்தவர்கள் மீது பழிபோட்டு கொண்டிருக்கிறார்கள்.
அந்த நிகழ்ச்சியை நடத்திய ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகளிடம் மீண்டும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மற்றவர்களை தீய சக்தி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவர்கள்தான் இளைஞர்களை தவறாக வழிநடத்தி வருகிறார்கள். இதேபோல தஞ்சாவூரில் விஜய்யை பார்க்க சென்ற மாணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
தவறான பாதைக்கு வழிநடத்துதல்
அவரைப் பார்ப்பதற்கு செல்கிறோம். பால் விற்பனை செய்யும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் அவர். அந்த மாணவர் 19 நாட்கள் ஐசியூவில் இருந்து இன்று உயிரிழந்துள்ளார். இன்றைக்கு வரை அவர்களுக்கு ஆறுதலோ, அஞ்சலியோ எதுவும் செலுத்தவில்லை. இதற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் அனுதாபப்பட்டு உதவி செய்கிறார்கள். இவர்கள் தான் தீய சக்தி.
தேர்தல், மாணவர் பிரச்சனை இவையெல்லாம் விட்டு இயக்குநர் அட்லி வீட்டில் இட்லி சுடுவதற்காக விஜய் பாம்பே செல்கிறார். இவர் சுகபோகத்துக்காக தனி விமானத்தில் அட்லி வீட்டு வளைகாப்புக்கு சென்றுள்ளார். இதுவா நாட்டிற்கு மிகவும் முக்கியம். இத்தனை பேர் அவரால் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் அளிக்காமல் தவறான பாதைகளைகளுக்கு கொண்டு செல்கிறார்கள்.
ஆதரவுக்கு பகிரங்க சவால்
ஆதவ் அர்ஜுனா முதலமைச்சருக்கு சவால் விடுகிறார். அவர் முதலமைச்சரை விவாதம் செய்ய அழைக்கிறார். ஆதவை நான் விவாதம் செய்ய அழைக்கிறேன். அவரிடம் இவ்வளவு திருட்டு பணம் எப்படி சேர்ந்தது. மார்ட்டின் குடும்பத்திற்குள் எப்படி சேர்ந்தார். அவருடன் விவாதம் செய்ய நான் தயார். சாதாரண வீட்டு மாணவன் உயிரிழந்துள்ளான். அவர் குடும்பத்திற்கு அனைத்து மாணவ சமுதாயமும் குரல் கொடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications