பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி ஏற்கனவே 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். அதிமுக சார்பில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்படும் நிலையில், மார்ச் 28 ஆம் தேதி முதல் அங்கு விஜய் பிரச்சாரம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தாலுக்காக தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதால் அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற மார்ச் 30 ஆம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கவுள்ளது. அதனால் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று துகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் விஜய் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக மும்பை சென்றது சர்ச்சையானது.

மார்ச் 28 முதல் பெரம்பூரில் பிரச்சாரம்
234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடும் என்று விஜய் கூறியுள்ளார். இந்நிலையில் தவெக சார்பில் மார்ச் 27 ஆம் தேதி (நாளை மறுநாள்) மாமல்லபுரத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. தவெக வேட்பாளர்களை மேடையில் அறிமுகம் செய்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
ஆலோசனை
இதற்காக பெரம்பூரில் ஏசியுடன் கூடிய தவெக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது. அதனை நாளை மறுநாள்.. அதாவது 27 ஆம் தேதி விஜய் திறந்து வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மார்ச் 28 ஆம் தேதி முதல் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் பிரச்சாரம் செய்வது தொடர்பாக அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், உள்துறை செயலாளரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
20 நாட்கள் பிரச்சாரம்
மொத்தம் 20 நாட்கள் பிரச்சாரம் செய்யும் விஜய், தினசரி 5-6 இடங்களில் பிரச்சாரம் செய்து பேசவுள்ளதாக சொல்லப்படுகிறது. தவெகவின் நட்சத்தி பேச்சாளர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது. விஜய், புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் உள்ளிட்ட 20 நிர்வாகிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. பெரம்பூரில் இருந்து தமிழகம் முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது .
-
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
விஜய் பெயரளவில் தான் கிறிஸ்தவர்.. சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர்.. அருட்தந்தை விமர்சனம்! -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா? -
விஜய் காரை மறித்த அஜிதாவுக்கு சீட் இல்லை.. நடிகர் ஸ்ரீநாத்திற்கு தூத்துக்குடியில் போட்டியிட சான்ஸ்! -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ்












Click it and Unblock the Notifications