குவிக்கப்பட்ட பவுன்சர்.. அதீத எச்சரிக்கையுடன் செயல்படும் தவெக.. QR இல்லாமல் விடாதீங்க.. விஜய் உஷார்
சென்னை: காஞ்சிபுரத்தில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் தனியார் கல்லூரியை சுற்றிலும் தகர சீட்டுகளால் மறைத்து உள்ளனர். அங்கே தற்போது அதிக அளவில் பவுன்சர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.
நிகழ்ச்சிக்கு 2000 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் தொண்டர்கள் உள்ளே செல்வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK), 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது. கட்சி வட்டாரங்களின்படி, TVK தலைவர்கள் ஓய்வுபெற்ற IAS அதிகாரிகளுடன் இணைந்து தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இது, ஒரு நடைமுறைப்படுத்தக் கூடிய, மக்கள் நலன் சார்ந்த தேர்தல் அறிக்கையை உருவாக்க உதவும் என கட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் இது தொடர்பாக நடைபெறும் இந்த ஆலோசனைகள் அடுத்த சில வாரங்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செயல்முறையில் ஈடுபட்டுள்ள ஓய்வுபெற்ற IAS அதிகாரிகள் பல ஆண்டு நிர்வாக அனுபவத்தைக் கொண்டுள்ளனர். இது பொதுமக்களின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்க்கும் வலுவான கொள்கைகளை வகுக்க உதவும், முக்கியமான பல கொள்கைகளை கொண்டு இருக்கும் என்று கட்சி நம்புகிறது.
TVK தலைவர்கள் கல்வி, சுகாதாரம், இளைஞர் நலன், விவசாயம், வேலைவாய்ப்பு உருவாக்கம், சட்டம்-ஒழுங்கு போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் அறிக்கை மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தரவுகளைச் சேகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. மாவட்டக் குழுக்கள், உள்ளூர் ஆதரவாளர்கள், மற்றும் துறைசார் நிபுணர்களிடமிருந்து தகவல்களைப் பெறுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாக மக்களை சந்திக்க முடிவு
இதற்கு முன்பாக கொஞ்சம் கொஞ்சமாக மக்களை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு இன்று நடைபெறுகிறது. இன்று காலை 11 மணிக்கு காஞ்சிபுரத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
விஜயை சந்திக்கும் மக்கள்
35க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 2000 பங்கேற்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்கேற்பாளர்கள் தங்களின் குறைகளை விஜயிடம் நேரடியாக எடுத்துரைப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய், தமிழக வெற்றிக் கழக தொண்டரணி உறுப்பினர்களையும் சந்திப்பார். இந்த உறுப்பினர்களுக்கு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளால் கூட்ட மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தினமும் சுமார் 100 தொண்டர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. காவல்துறை ஆட்சேர்ப்புக்கான தகுதி மற்றும் உடல் தகுதி விதிமுறைகளைப் பின்பற்றி இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழக தொண்டர் படை இதன் மூலம் தயார் செய்யப்படும். முதல் கட்டப் பயிற்சி முடிந்ததும், மாவட்ட அளவிலான முகாம்கள் நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
“திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள்.. யாரும் தப்பிக்க முடியாது”.. அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன்











Click it and Unblock the Notifications