தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை.. நீங்க திமுகவுக்கு போட்டியா.. சீனுக்குள் வந்த நயினார் நாகேந்திரன்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாத நிலையில், சட்டசபைத் தேர்தலில் தனக்கும் திமுகவுக்கும் போட்டி என்பது விந்தையிலும் விந்தை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் கூட்டத்தை கூட்டிவிடலாம் என்று கூறிய நயினார் நாகேந்திரன், ஆதவ் அர்ஜுனா பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்திற்கு பின் தவெக மீண்டும் தங்களின் அரசியல் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலமாக அதிமுகவின் கூட்டணி அழைப்பை தவெக நிராகரித்ததாக பார்க்கப்படுகிறது.

TVK vs DMK

கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிமுகவின் கூட்டணி அழைப்பை தவெக நிராகரித்த பின், அதிமுகவினர் விஜய் மற்றும் தவெகவை கடுமையாக தாக்க தொடங்கியுள்ளனர்.

அதிமுகவின் முக்கிய தலைவர்களான கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் விஜய்யை சாடி இருக்கின்றனர். தற்போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் தவெக மற்றும் விஜய்யை அட்டாக் செய்ய தொடங்கியுள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை.

ஆதவ் அர்ஜுனா பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைக்கிறார். ஏதோ கூட்டம் போடும் போது, கூட்டம் வருவதால்.. தேர்தலின் போது கூட்டத்தை கூட்டிவிடலாம். ஆட்சிக்கு வர வேண்டும்.. மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும்.. எம்எல்ஏ-க்கள் வர வேண்டும்.. பாஜகவில் 300 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறோம்.. 1,200க்கும் அதிகமான எம்எல்ஏ-க்களுக்கு மேல் இருக்கிறோம்..

உலகிலேயே மிகப்பெரிய கட்சி பாஜக.. பாஜக தீவிரமாக யாரையும் எதிர்க்காது. கொள்கை ரீதியாகவே எதிர்க்கிறது. கரூர் விவகாரத்தில் விஜய் என்று இல்லை.. யாராக இருந்தாலும் தனி நபரை தாக்கிப் பேசினால், பாஜக ஆதரவு தராது. நாங்கள் தவெகவுக்கு ஆதரவில்லை. எந்த ஒரு தனி நபரும் தாக்கப்படக் கூடாது என்ற கோட்பாடுகளுக்காகவே அப்படி பேசினோம். கவுன்சிலர் கூட இல்லாத தவெகவில், தேர்தலில் தனக்கும் திமுகவுக்கும் போட்டி என்பது விந்தையிலும் விந்தை என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+