விஜய் முதல்வராவதில் சிக்கல்.. தயக்கம் காட்டும் ஆளுநர்! சட்ட ஆலோசனையில் ராஜ்பவன்! என்ன பிரச்சனை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்க விஜய் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் உரிமை கோரி உள்ளார். ஆனால் விஜய்யை முதல்வராக்குவதில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தயங்குகிறார். இதனால் அவர் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தயக்கத்தின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதனால் ஒருவர் முதல்வராக வேண்டும் என்றால் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. இருப்பினும் மெஜாரிட்டிக்கு இன்னும் 10 எம்எல்ஏக்கள் தேவை.

tvk-vs-governor-vijays-oath-taking-ceremony-in-doubt-tamil-nadu-governor-seeks-legal-advice-due-t

இதனால் விஜய் முதல்வராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியை விட்டு வெளியேறி தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் தவெகவின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும் இன்னும் மெஜாரிட்டியை தொடரவில்லை. இன்னும் 5 எம்எல்ஏக்கள் தேவையாக உள்ளது. இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 6 எம்எல்ஏக்கள் வைத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் (2 எம்எல்ஏ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2 எம்எல்ஏ), விசிக (2 எம்எல்ஏ) என 3 கட்சிகளுக்கு விஜய் கடிதம் எழுதி ஆதரவு கோரியுள்ளார். ஆனால் இந்த கட்சிகள் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

இதனால் விஜய்யின் தவெக இன்னும் மெஜாரிட்டிக்கான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இன்றி தவித்து வருகிறது. இதற்கிடையே தான் விஜய் இன்று சென்னை லோக்பவனில் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தங்களுக்கு மொத்தம் 113 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், அவர்களின் ஆதரவு கடிதங்களையும் வழங்கினார்.

ஆனால் தற்போது அவரை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. இதற்கு மெஜாரிட்டி இல்லாததது தான். மெஜாரிட்டி இல்லாமல் விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பதில் ஆளுநர் தயக்கம் காட்டுகிறார். இதனால் விஜய் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு கட்டாயம் இன்னும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையாக உள்ளது.

இதற்கிடையே தான் விஜய்யை முதல்வராக பதவியேற்க அழைக்கலாமா? வேண்டாமா? என்பதில் நிலவும் குழப்பத்தை தீர்க்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். இவர்களின் ஆலோசனைக்கு பிறகு தான் விஜய்யை முதல்வராக பதவியேற்க அழைக்கலாமா? என்பதை ஆளுநர் முடிவெடுக்க உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+