25 ஆண்டுகளாக அரசியலில் இருக்காங்க.. சொந்தமாக ஒரு தொகுதி உண்டா.. தமிழிசையை விளாசிய நிர்மல் குமார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 25 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தமிழிசை செளந்தரராஜனுக்கு சொந்தமாக ஒரு தொகுதி உண்டா என்று தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பி இருக்கிறார். தூங்கி எழுந்தால் என்டிஏ கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என்று தமிழிசை பேசி வருவதாக விமர்சித்த நிர்மல் குமார், அதிமுக பரிதாபமான நிலைக்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

நேற்று தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தவெக கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்க வேண்டும். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த காங்கிரஸ் கட்சி, இன்று ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவளித்து தேய்ந்து வருகிறது. தவெக வாய்ப்பை ஏற்றுக் கொண்டால், அவர்களுக்கு பவர் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார்.

TVK vs Tamilisai

வெளிப்படையாக விஜய்யின் தந்தை காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தது பலரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதுகுறித்து தவெக துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன கருத்தை கட்சியின் கருத்தாக பார்க்க வேண்டாம். அதனை பொதுமக்களின் கருத்தாக பார்க்க வேண்டும்.

அதேபோல் அதிமுக என்ற அரசியல் கட்சி திமுகவை எதிர்த்து தொடங்கப்பட்டது. அதனால் அவர்கள் திமுகவை எதிர்த்து பேச வேண்டும்.. ஆனால் அவர்கள் திமுகவை எதிர்த்து பேச தயங்குகிறார்கள். அவர்களுக்குள் ஏதோ ஒரு முரண்பாடு உள்ளது. அதனை மடைமாற்றம் செய்வதற்காக தவெகவை விமர்சிக்கிறார்கள். எங்களுக்கும் திமுகவுக்கும் இடையில் மட்டுமே போட்டி.

நாங்கள் களத்தில் இல்லாதவர்களை பற்றி கவலைப்படவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுகவின் இன்றைய நிலை பரிதாபமாக உள்ளது. தங்களை காப்பாற்றிக் கொள்ள எடுத்திருக்கும் நிலைப்பாடு குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. கரூர் சம்பவத்தில் ஆதரவாக பேசிய அதிமுக, அரசியலுக்காக மாற்றி பேசுகிறார்கள்.

அதேபோல் செங்கோட்டையன் மீது ஏதோவொரு ஊழல் குற்றச்சாட்டோ, வழக்கோ இருந்தால் சொல்லுங்கள்.. விஜய்யை போல் தூய்மையான கரங்கள் இருந்தால் மட்டுமே தவெகவில் சேர்த்துக் கொள்வோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, தமிழிசை செளந்தரராஜன் எங்கள் கட்சியை பற்றி தொடர்ச்சியாக விமர்சனம் வைத்துக் கொண்டே இருக்கிறார்.

25 ஆண்டுகளாக தமிழிசை செளந்தரராஜன் அரசியலில் இருக்கிறார். அவருக்கு என்று சொந்தமாக ஒரு தொகுதி இருக்கிறதா என்றால் இல்லை.. ஒருமுறை தூத்துக்குடி.. ஒருமுறை விருகம்பாக்கம்.. ஒருமுறை வேளச்சேரி என்று நின்றுக் கொண்டிருக்கிறார்கள். மக்களை சந்தித்து மக்கள் மீது நம்பிக்கை வைத்தால், நிச்சயம் வெல்ல வைப்பார்கள்.

தூங்கி எழுந்தால் நாங்கள் அவர்களோடு கூட்டணிக்கு வர வேண்டும் என்று பேசிக் கொண்டே இருக்கிறார். நாங்களும் 6 மாதமாக பதில் சொல்லிவிட்டோம்.. எங்களின் நிலைப்பாட்டை அறிவித்துவிட்டோம்.. தேவையில்லாமல் தவெக குறித்து தமிழிசை செளந்தரராஜன் பேச வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+