அஜித் ரசிகர்கள் ஓட்டு விஜய்க்கு கிடைக்காது.. குமுறும் தவெக! பின்னணியில் ‛மங்காத்தா’ VS ‛தெறி’ மோதல்
சென்னை: ‛‛இப்போது விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் இடையே எந்த பிரச்சனையும் வரக்கூடாது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அனைவரின் ஆதரவும் தேர்தலுக்கு எங்களுக்கு தேவையாக உள்ளது. இதனால் ஜனவரி 23ம் தேதி அஜித்தின் ‛மங்காத்தா' திரைப்படத்துடன் விஜயின் ‛தெறி' திரைப்படத்தை ரி ரிலீஸ் செய்ய வேண்டாம். ஒரே நேரத்தில் 2 திரைப்படமும் வெளியாகும்போதும் அது நிச்சயம் ரசிகர்களின் சண்டையாக மாறும். அரசியல் எதிரிகள் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் விஜய் ரசிகர்கள் இன்னும் சினிமா விரும்பிகளாகவே இருக்கின்றனர், தீவிர அரசியலில் இல்லை என்பதை காட்ட விரும்புகின்றனர்'' என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவிற்கு, தவெக நிர்வாகி கோரிக்கை வைத்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி நடிகரும், தவெக தலைவருமான விஜயின் கடைசி திரைப்படமான ‛ஜனநாயகன்' கடந்த 9ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ‛சென்சார்' சான்று கிடைக்காததால் திரைப்படம் ரிலீசாகவில்லை. திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் நடிகர் விஜயின் ‛தெறி' திரைப்படம் பொங்கலையொட்டி ரி ரிலீஸ் செய்யப்படும் என்று அதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கடந்த 10ம் தேதி அறிவித்தார். அதன்பிறகு புதிய திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீசாவதால் ‛தெறி' திரைப்படம் ரி ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக அவரே கடந்த 13ம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில் தான் கலைப்புலி எஸ் தாணு நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஜனவரி 23 முதல் உலகமெங்கும் தெறி. நாளை டிரெய்லர் ரிலீஸ் என்று அறிவித்தார். இது விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினரை அப்செட்டாக்கி உள்ளது. ஏனென்றால் அதே ஜனவரி 23ல் தான் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‛மங்காத்தா' திரைப்படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால் விஜய் - அஜித் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள், அஜித் குமாரின் ரசிகர்களிடம் ஆதரவு கோரி வருகின்றனர். சினிமாவில் இருவரின் ரசிகர்களும் எதிரெதிர் துருவங்களாக உள்ள நிலையில் விஜயின் அரசியல் வருகையால் அவரது ரசிகர்கள் அஜித்தின் ரசிகர்களிடம் ஓட்டு கேட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் தான் மங்கத்தா VS தெறி என்ற மோதல் உருவாகி உள்ளது.
இதனை மையப்படுத்தி மீண்டும் விஜய் - அஜித் குமார் ரசிகர்கள் மோதிக்கொள்ளும் வாய்ப்புள்ளது. இது தவெகவிற்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தலாம். அதாவது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் விஜய் கட்சிக்கு அஜித் ரசிகர்களின் ஓட்டுகள் கிடைப்பதை தடுக்கும் என விஜய் ரசிகர்களும், தவெக நிர்வாகிகளும் நினைக்கின்றனர். இதனால் ‛தெறி' ரி ரிலீசை தள்ளி வைக்க வேண்டும் என்று அவர்கள் சமூக வலைதளங்களில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தவெக கட்சியின் வடசென்னை மாணவர் பிரிவின் துணை அமைப்பாளர் பிரேம் குமார் மூர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: டீயர் தானு சார்.. நான் தீவிர விஜய் ரசிகராக உங்களுக்கு இதனை எழுதுகிறேன். சார்.. ஜனவரி 23ம் தேதி ‛தெறி' திரைப்படம் ரி ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டதை பார்த்தேன். திரையரங்கில் விஜயை எப்போதும் பார்க்க நான் விரும்புகிறேன். ஆனால் இந்ததிரைப்படத்துக்கான டைமிங்கால் நான் கவலை கொள்கிறேன்.
ஏனென்றால், அதே நாளில் தான் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தை ரி ரிலீஸ் செய்யும் திட்டத்தை வைத்துள்ளனர். வழக்கமாக இதுபோன்ற மோதல்கள் வேடிக்கையானது. ஆனால் இந்த ஆண்டு முற்றிலும் வேறுபட்டது. 2026 என்பது நமக்கு மிகவும் முக்கியமான ஆண்டு. விஜய் தவெக கட்சியை தொடங்கி உள்ளார். நமது ஒற்றை இலக்கு என்பது தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விஜயை முதல்வராக்குவது மட்டுமே. இப்போது எங்களின் சகோதர, சகோதரிகள் சினிமா தொடர்பாக சண்டையிடுவதை நிறுத்தி கட்சிக்காக பணியாற்றி வருகின்றனர்.
இப்போது ஒரே நேரத்தில் 2 திரைப்படமும் வெளியாகும்போதும் அது நிச்சயம் சமூக வலைதளம் மற்றும் தெருக்களில் ரசிகர்களின் சண்டையாக மாறும். இதனை தான் நம்முடைய அரசில் எதிரிகள் (திமுக, அதிமுக, பாஜக) விரும்புகின்றன. அவர்கள், விஜய் ரசிகர்கள் இன்னும் சினிமா விரும்பிகளாகவே இருக்கின்றனர், தீவிர அரசியலில் இல்லை என்பதை காட்ட விரும்புகின்றனர். இந்த காலக்கட்டத்தில் மங்காத்தா திரைப்படத்தை ரிலீஸ் செய்வது கூட ஆளும் கட்சியினர் எங்களை திசைதிருப்பும் யுக்தியாக தான் நினைக்கிறோம்.
அவர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுக்க வேண்டாம். இப்போதைக்கு விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் இடையே எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று விரும்புகிறோம். அனைவரின் ஆதரவும் தேர்தலுக்கு எங்களுக்கு தேவையாக உள்ளது. உண்மையான ரசிகனாக ஒன்றை கேட்டு கொள்கிறேன். ‛தெறி' ரி ரிலீஸை ஒத்தி வைத்துவிட்டு 2026 தேர்தல் வெற்றியில் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் விஜயை தலைமை செயலகத்தில் பார்க்க விரும்புகிறோம். தியேட்டரில் அல்ல. தயவு செய்து எங்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் சார்'' என்று கூறியுள்ளார்.
-
ஒரு நாள் ரெஸ்ட், ஒரு நாள் பிரசாரம்.. திருப்பூரில் நாளை ரோடு ஷோ.. விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்! -
கன்னியாகுமரியில் அதிமுக - பாஜக கூட்டணி வாக்குகளை விஜய் கைப்பற்றுகிறார்.. பத்திரிகையாளர் சுவாமிநாதன்! -
ஜனநாயகன் படம் ஹைதராபாத் ஸ்டுடியோவில் கசிந்ததா.. எடிட்டர் சங்கம் அளித்த விளக்கம் -
விஜய் என்கிட்ட கேட்ட கேள்வி.. நான் எதிர்பார்க்கல! சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்! ஓபனாக பேசிய ராதாரவி -
கன்னியாகுமரியில் விஜய் ஓட்டிய சைக்கிள்… விலை இவ்வளவு தானா? அதை வாங்கும் போது நடந்த சம்பவம் -
மாட்டிகிட்டியே பங்கு! திமுகவின் வாக்குறுதியை காப்பியடித்து தவெகவின் வாக்குறுதியாக அறிவித்த விஜய் -
ஜனநாயகன் படம் லீக்.. 'அவர்' ஒருவரை தவிர அனைவரும் கண்டிப்பு -
ஜனநாயகன் படம் லீக்கான விவகாரம்.. சிபிஎப்சிதான் காரணமா? தணிக்கை வாரியம் பரபர விளக்கம் -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
குடும்பத்தை பார்க்காதவர் எப்படி மக்களை பார்ப்பார்..சுத்து போட்ட மக்கள்..தெறித்து ஓடிய தவெக வேட்பாளர் -
பிரச்சாரக் களத்துக்கு வரும் கமல்ஹாசன்.. விஜய் போட்டியிடும் 2 தொகுதிகளும் டார்கெட்! -
விஜய்க்கு கூடிய கூட்டம்.. வாயை பிளந்த கட்சிகள்.. ரியாலிட்டி என்ன? விசாரித்த ஸ்டாலின்! பின்னணி












Click it and Unblock the Notifications