தமிழகத்தில் தவெகவுக்கு 15 முதல் 20% வாக்குகள்! பிரசாந்த் கிஷோர் பரபரப்பு அறிக்கை
சென்னை: தமிழகத்தில் தவெக கட்சிக்கு 15% முதல் 20% வரை வாக்கு சதவீதம் கிடைக்கும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் பிரசாந்த் கிஷோர் வழங்கினார்.
ஐபேக் எனும் நிறுவனம் மூலம் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு வெற்றிக்கான வியூகம் வகுத்துக் கொடுத்தார் பிரசாந்த் கிஷோர். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு கடைசியாக திமுகவுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்த ஐபேக் நிறுவனம் அதன் பிறகு எந்த கட்சிக்கும் வியூகம் வகுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு வந்த பிரசாந்த் கிஷோர், அங்கு அவருடன் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்த நிலையில் தவெக குறித்து ஆய்வறிக்கையை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் பிரசாந்த் கிஷோர் இன்று கொடுத்தார். அதில் தமிழகத்தில் தவெகவுக்கு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு அதிக வாக்குகளை பெற தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டன. மேலும் எந்த பகுதியில் தவெகவுக்கு அதிக வாக்குகள் உள்ளன என்பது குறித்து ஆனந்துடன் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இந்த அறிக்கையை தவெக தலைவர் விஜய்யிடம் புஸ்ஸி ஆனந்த் ஒப்படைப்பார் என தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகம் எனும் விஜய்யின் கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலை மையப்படுத்தி தற்போதே அதற்கான பணிகளை அவர் தொடங்கியுள்ளார்.
இதற்காக விஜய் அடுத்த கட்டமாக வரும் மார்ச் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிகிறது. பூத் வாரியாக நிர்வாகிகளை நியமிக்கவும் விஜய் தவெகவினருக்கு உத்தரவிட்டுள்ளார். விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜுனா இணைந்தார். அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தவெகவில் வியூக வகுப்பாளராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து ஆதவ் செயல்படுவார் என விஜய் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் சந்தித்து பேசியிருந்தார். விஜய் சந்திக்க ஆரம்பத்திலேயே பிரசாந்த் கிஷோர் ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. ஆனால் அவருக்கு இப்போதுதான் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பால் விஜய் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் வியூகங்களை வகுப்பாரா என்றால் அதுதான் இல்லை, அவர் ஏற்கெனவே எந்த கட்சிக்கும் வியூகம் வகுக்கவில்லை என கூறிவிட்டார். எனவே தவெகவின் பலம் குறித்து ஆய்வறிக்கைகளை கொடுப்பதில் மட்டும் தவெகவுக்கு உதவுவார் என சொல்லப்பட்டது.
இதற்காக பிரசாந்த் கிஷோர் , பனையூரில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டில் தங்கியிருந்தார். நேற்றைய தினம் புஸ்ஸி ஆனந்த், ஆதவ், ஜான், பிகே ஆகியோர் ஆலோசனை நடத்தியிருந்தனர். இன்றைய தினம் மீண்டும் ஆதவ் அர்ஜுனா- பிகே சந்திப்பு நடந்த நிலையில் அது நிறைவு பெற்றது.
ஆதவ் வீட்டில் வைத்து தவெகவுக்கான ஆய்வறிக்கையை பிரசாந்த் கிஷோர், புஸ்ஸி ஆனந்திடம் கொடுத்துவிட்டார். அதை விஜய்யிடம் ஆனந்த் ஒப்படைப்பார் என தெரிகிறது. அந்த ஆய்வறிக்கையில் எந்த வயதினர் தவெகவுக்கு வாக்களிப்பார்கள், எந்த வயதினர் தவெகவுக்கு அளிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள், எந்த பகுதியில் விஜய் கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது உள்ளிட்டவை குறித்தும் இடம் பெற்றுள்ளது.
-
Perambur Power Cut: பவர் இல்லை சிஎம்! பெரம்பூர் பகுதியில் 3 நாட்களாக தொடர் மின்வெட்டு! தூக்கத்தை தொலைத்த மக்கள் -
இரக்கமே காட்டாதீங்க.. கேஸை போடுங்க.. திமுக மாஜி அமைச்சர்களுக்கு விஜய் செக்.. வரிசையாக ஆக்சன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
நீ என்ன திமுக ஆளா? மரியாதை இல்லாமல் பேசிய அமைச்சர்கள்.. சட்டசபை செயலர் சீனிவாசன் ராஜினாமா பின்னணி?! -
கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்கப்போகிறாரா தாடி பாலாஜி.. லட்சிய ஜனநாயக கட்சியிலிருந்து விலகல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம்.. எல்லாத்துக்குமே திமுக காரணமா.. சென்னை மேயர் பிரியா கேள்வி -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications