விஜய்யின் தேர்தல் அறிக்கையிலும் ஓசியா? ஸ்டாலின் சார் எங்களை மன்னிச்சிடுங்க! தவெக பெண் வீடியோ
சென்னை: ஓசி வேண்டாம்னு திமுகவை திட்டினோமே, இப்ப நீங்களும் ஓசியையே தேர்தல் அறிக்கையா அறிவிச்சிருக்கீங்க என விஜய்யை தவெக பெண் தொண்டர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தவெக பெண் தொண்டர் ஒருவர் கூறியிருப்பதாவது: தவெக தேர்தல் அறிக்கையை டிவியில் பார்த்துவிட்டு வந்தேன், ரொம்ப சந்தோஷம் அண்ணா! ஆனால் நாங்கள் எல்லாம் ஓசி பஸ் வேண்டாம், ஓசி காசு வேண்டாம் என திமுகவை திட்டிவிட்டோம்.

இப்போது நீங்களும் (விஜய்) இலவசம் இலவசம் என அறிக்கையில் கூறியுள்ளதால், திமுகவினர் எங்களை அசிங்கமாக திட்டினால் என்ன அண்ணா செய்வது? என்ன சொல்லி முட்டுக் கொடுக்கிறது?
அண்ணா நீங்கள் என்ன வேணாலும் செய்ங்க, முட்டுக் கொடுக்க நாங்கள் இருக்கிறோம். திமுகவினர் முதல்வர் மாதிரி நாகரீகமானவர்கள் என நினைக்கிறேன். பார்க்கலாம் என்ன நடக்குதுனு!
அதிலும் உங்கள் அறிக்கை எல்லாம் ஏற்கனவே கேட்ட மாதிரியே இருக்கிறது அண்ணா! புதுசா ஏதாவது செய்ங்க. நாட்டுல எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு! பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன், மத்திய அரசை பார்த்து, மக்கள் எல்லாம் சாலை வரி கட்டுகிறார்கள். பிறகு எதற்கு சுங்கக் கட்டணம் என கேட்டுள்ளார்.
அது போல் நீங்களும் மத்திய அரசை ஏதாவது கேளுங்க அண்ணா! ஏன் மத்திய அரசை விமர்சிக்கவே மாட்டேங்கிறீங்க! ஆமா இல்ல நம்மோட ஒரே எதிரி திமுகதானே. அதனால் அவங்களை எல்லாம் விட்டுடலாம்! இந்த வீடியோவை நான் போஸ்ட் செய்ய போகிறேன். எப்படியும் ஃபேக் ஐடில வந்து என்னை எல்லாரும் திட்டுவாங்க! ஆனாலும் மனதை தைரியமாக வைத்துக் கொண்டு இதை போஸ்ட் செய்றேன். ஸ்டாலின் சார் என்னை மன்னித்துவிடுங்கள் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
- பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கான தனி இலாகா உருவாக்கப்படும். அந்த இலாகா எனது நேரடிக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்கும்.
- 60 வயது வரை உள்ள அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும். இதில் மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களாக இருப்பவர்களின் குடும்பங்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
- ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.
- பெண்கள் திருமணத்திற்காக எட்டு கிராம் தங்கமும் தரமான பட்டுச் சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக அளிக்கப்படும்.
- 1 முதல் 12 ஆம் தேதி வகுப்பு வரை குழந்தைகள் இடைநிற்றல் இல்லாமல் இருக்க, ஒவ்வொரு தாய்க்கும் அல்லது பாதுகாவலருக்கும் ஆண்டுதோறும் 15 ஆயிரம் ரூபாய் பொருளாதார உதவித்தொகை வழங்கப்படும்.
- அரசு போக்குவரத்தின் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் பயணிக்கும் வகையில் உத்தரவிடும். தமிழகத்தின் எந்த மூலையிலிருந்தும் எந்த இடத்திற்கும் அனைத்துப் பெண்களும் கட்டணமின்றி பயணிக்கலாம்.
- பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணி வேலுநாச்சியார் படை ஏற்படுத்தப்படும். சாதாரண உடையில் இருக்கிற இந்த படையைச் சேர்ந்த பெண்கள் பாடி கேம் உடன் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
- பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
- தனியார் ஷேர் ஆட்டோக்கள் உள்பட அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் அவசர கால பொத்தான்கள் பொருத்தப்படும். சிசிடிவி கேமராக்களும் விளக்குகளும் வெளிச்சம் இல்லா இடங்களே இல்லை என்ற வகையில் ஜீரோ டார்க் ஸ்பாட்ஸ் உருவாக்கப்படும்.
- ரேஷன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா சானிட்டரி பேட்ஸ் வழங்குவது உறுதி செய்யப்படும்.
- பெண்கள் நடத்தும் சுய உதவிக்குழுக்களுக்கு 5 லட்சம் வரை வட்டியில்லா நிதி வழங்கப்படும். சுய உதவிக்குழுக்களில் இருந்து பதிவு செய்யப்பட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக மாறுபவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ 5லட்சம் வழங்கப்படும். அது 100 சதவீதம் மானியமாகவே வழங்கப்படும்.
- தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசிர்வாதமாக ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். கூடவே Baby Welcome Kit வழங்கப்படும்.
மேற்கண்ட 12 விஷயங்களை மகளிருக்கான தேர்தல் அறிக்கையாக விஜய் வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications