அதிகாலையில் பார்த்தால்.. சாலையில் என்ன இது? சென்னையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்.. "வானிலை ட்விஸ்ட்"
சென்னை: சென்னையில் மழை நேற்று இரவோடு ஓய்ந்த நிலையில் வானிலையில் திடீரென முக்கியமான மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை உச்சம் தொட்டு உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது.
இன்னும் 2 நாட்களில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை முன்னிட்டு அடுத்த வாரம் மீண்டும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனமழை
சென்னையில் நேற்று மாலை வரை கனமழை பெய்தது. நேற்று மாலை சென்னையின் பெரும்பாலான பகுதிகளிலும், இரவு நேரத்தில் சில பகுதிகளிலும் கனமழை பெய்தது. ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் ஆகிய இடங்களில் சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்தது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் மழை பெய்தது.

மாற்றம்
நேற்று இரவுதான் சென்னையில் மழை பெய்து இருந்தாலும் அதிகாலையில் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டது. எதிர்பார்க்காத அளவிற்கு அதிகாலையில் திடீரென சென்னையில் பல இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டது. முதல்நாள் இரவுதான் மழை பெய்து இருந்தாலும் காலையில் சாலையே தெரியாத அளவிற்கு பனி பெய்தது. பொதுவாக மழை காலங்களில் பனி பெய்யாது.

பனி
மழை குறைய போகிறது என்பதற்கு அறிகுறியாகத்தான் பனி பெய்யும். வடகிழக்கு பருவமழை தொடங்கி டிசம்பர் இறுதியில் பனிக்காலம் தொடங்கும். அப்போதும் இதே போல்தான் மழைபெய்யும். அதேபோலத்தான் சென்னையில் பல இடங்களில் இன்று அதிகாலை பனி பொழிந்தது. வெதர்மேன் பிரதீப் ஜான் நேற்று முதல்நாள் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூட இன்றில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே இருக்கும். முக்கியமாக உங்கள் வாகனங்களில் பனியை கூட நீங்கள் பார்க்க முடியும், என்று குறிப்பிட்டு இருந்தார்.

சாலை இருட்டு
அதன்படியே இன்று சென்னையில் பனிப்பொழிவு இருந்தது. பல இடங்களில் சாலைகள் இருட்டாக இருந்தன. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு சென்னையில் சில இடங்களில் இருந்தன. சென்னையில் இன்றில் இருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும். ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்யலாம். மற்றபடி ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை இருக்கும். அதன்பின் மீண்டும் 20ம் தேதிக்கு பின்பாக கனமழை பெய்யும்.

தென் மாவட்டங்கள்
ஆனால் தென் மாவட்டங்களில் இப்போதைக்கு மழை நிற்காது. இரண்டு நாட்களுக்கு குறைந்தபட்சம் தென் மாவட்டங்களில் மழை பெய்யும். அதன்பின் மழை தென் மாவட்டங்களில் படிப்படியாக குறையும். நாளை வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாழ்வு பகுதி உருவாகும் பட்சத்தில்தான் சென்னையில் மீண்டும் மழை தொடங்கும். இப்போதைக்கு சென்னையில் கடந்த வாரம் பெய்தது போல கனமழைக்கு வாய்ப்பு இல்லை.












Click it and Unblock the Notifications