ட்விஸ்ட் + சுவாரஸ்யம்.. இந்திய ஜனாதிபதி தேர்தல்களின் தடங்களும், வரலாறுகளும்.. ஒரு பிளாஷ்பேக்!
ட்விஸ்ட்கள், திருப்பங்கள் நிறைந்ததாக குடியரசு தலைவர் தேர்தல்கள் அமைந்து வந்துள்ளன
சென்னை: அடுத்த ஜனாதிபதி யார் என்ற ஆவல், இந்த தேசத்தை கவ்வியுள்ள நிலையில், இதுவரை ஜனாதிபதி தேர்தல்களின்போது நடைபெற்ற சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிய போகிறது.. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று தேர்தல் நடந்து வருகிறது.
காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது.. நாடு முழுவதும் உள்ள எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர்.

வேட்பாளர்
இதில், தமிழகத்தை சேர்ந்த 39 மக்களவை எம்பிக்களும், 18 மாநிலங்களவை எம்பிக்களும் அடங்குவார்கள்... இந்த தேர்தலில் மொத்தம் உள்ள சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு மதிப்பில் 50 சதவீத வாக்குகளை தாண்டும் வேட்பாளர்தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவா.. இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 21ம் தேதி எண்ணப்பட உள்ளன... வெற்றி பெறும் வேட்பாளர் ஜூலை 25 அன்று, இந்த நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்பார்.

நாராயணன்
இன்று நடைபெறும் தேர்தலுக்கு முன்பாக, 14 தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன... அவற்றில் சில சுவாரசியமான நிகழ்வுகளும், ட்விஸ்ட்களும் நடந்துள்ளன.. நம் நாட்டின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் (1952,1957), சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1962), பக்ருதின் அலி அகமது (1974), நீலம் சஞ்சீவ ரெட்டி(1977), ஜெயில் சிங் (1982), ராமசாமி வெங்கட்ராமன் (1987), கே.ஆர். நாராயணன் (1997), ஏ.பி.ஜே அப்துல் கலாம் (2002) ஆகியோர் போட்டியின்றி ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.

சுயேச்சை
இதில் ராஜேந்திர பிரசாத், கேஆர். நாராயணன், பக்ருதின் அலி அகமது, ஜெயில் சிங், ராமசாமி வெங்கட்ராமன் ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர்களாக களமிறங்கினர்... நீலம் சஞ்சீவ ரெட்டி ஜனதா கட்சியால் நிறுத்தப்பட்டவர்.. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சுயேச்சை வேட்பாளர்களாக தேர்தலில் வெற்றி பெற்றார்கள்... இந்த சுயேட்சைகள் போட்டியிடுவது தொடர்பாக, நிறைய தகவல்கள் உண்டு..

ராஜேந்திர பிரசாத்
முதன்முதலில் போட்டியிட்ட, டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை எதிர்த்து 3 சுயேட்சைகள் களமிறங்கினர்.. ஆனால், இந்த தேர்தல் மட்டுமல்ல, 1957-ல் நடந்த தேர்தலிலும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தொடர்ச்சியாக 2 முறை வென்று குடியரசுத் தலைவரானார். இந்தியாவில் 2 முறை பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவர் இவர் மட்டுமே என்பது ஸ்பெஷல் தகவலாகும்.. வழக்கமாக, குடியரசு தலைவர் தேர்தலுக்கு 2, 3 அல்லது 4 பேர் போட்டியிடுவது வழக்கம்.. ஆனால், 1967 தேர்தலில் மட்டும்தான் 17 பேர் போட்டியிட்டார்களாம்.. இதில் 15 பேர் சுயேட்சைகள் என்பது தனிக்கதை.

பயங்கர போட்டி
இதற்கு பிறகு, 1969 தேர்தலில் 15 பேர் போட்டியிட்டார்கள். சுயேச்சைகள் பிரதான போட்டியிட காரணம், அப்போதெல்லாம் அவர்களுக்கு போட்டியிட எந்த தடையும், கட்டுப்பாடும் இல்லை. அதனால்தான் விருப்பப்பட்டு போட்டியிட பலர் முன்வந்தனர். பிறகு, சுயேட்சைகள் போட்டியிடுவதை தடுக்க விதிமுறைகள் கொண்டுவரப்படவும், சுயேச்சைகள் அதை எதிர்த்து கோர்ட்டுக்கு போனார்கள்.. இறுதியில், சுயேச்சைகள் போட்டியிடுவதை தடுக்கவும், வழக்கு தொடர்வதைத் தடுக்கவும் புதிய 1974 தேர்தலில் நிறைய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன..

10 எம்எல்ஏக்கள்
முக்கியமாக, 10 எம்பி, எம்எல்ஏக்கள் அந்த சுயேச்சையை முன்மொழிய வேண்டுமாம், 10 பேர் வழிமொழிய வேண்டுமாம்.. இதுதான் அந்த விதிமுறை.. அதேபோல, குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஹைகோர்ட்களில் வழக்கு தொடர முடியாது, சுப்ரீம்கோர்ட் மட்டுமே வழக்கை விசாரிக்கும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவும், சுயேச்சைகள் போட்டியிடுவது வெகுவாக குறைந்துவிட்டது.

திடீர் மறைவு
1969 தேர்தலை, நாட்டு மக்களால் மறக்கவே முடியாது.. காரணம், ஏராளமான சர்ச்சைகள் நடந்தது இந்த வருடம்தான்.. இந்த வருடம்தான், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஜாகீர் உசேன் திடீரென்று இறந்துவிட்டார்.. அதனால், துணை ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி ஜனாதிபதியாக பதவியேற்ற சில நாள்களிலேயா துணை ஜனாதிபதி மற்றும் செயல் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. உடனே, முகம்மது இதயத்துல்லா செயல் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றார்.

சிண்டிகேட்
இப்படிப்பட்ட நெருக்கடி நிலையில்தான், ஜனாதிபதி தேர்தல் நடந்தது.. காங்கிரஸ் இரண்டாக பிரிந்தது.. இந்திரா காந்தி அணி + சிண்டிகேட் அணி என்று உடைந்தது.. நீலம் சஞ்சீவ ரெட்டி காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. சுயேச்சை வேட்பாளராக வி.வி.கிரியை இந்திரா நிறுத்தினார்.. இதில், நீலம் சஞ்சீவ ரெட்டியை வெற்றி பெற்றார்.. இத்தனைக்கும் மனசாட்சிப்படி அனைவரும் ஓட்டுப்போடுங்கள் என்று இந்திரா கேட்டுக் கொண்டும், விவி கிரி சறுக்கலை சந்தித்தார். அதேபோல, 2007-ம் ஆண்டு நடந்த 12வது ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக ஒரு பெண் இந்திய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்தியாவின் கவனத்தை திருப்பியது..

எகிறும் எதிர்பார்ப்பு
ஆனால், 2017 தேர்தலில் பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்தை நிறுத்தியதும், 17 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பெண் வேட்பாளர் மீரா குமாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது.. இதில் மீரா குமார் தோல்வி அடைந்தார். இந்த முறை தேர்தல் மிகுந்த பரபரப்பை கூட்டி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான திரெளபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவும் மோதுகின்றனர்.. உள்ளது.. விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், அதற்கு தேசிய கட்சிகள் தயாராகி வரும் நிலையில், நம்முடைய அடுத்த ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு கூடி வருகிறது.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications