சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடிக்கு நன்றி.. திடீரென டிரெண்ட்டாகிறதே எதற்கு தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    BSNL Comes with 4G services

    சென்னை: டுவிட்டரில் இன்று மாலை முதல் திடீரென, 'பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி' என்று பொருள்படும் வகையில் ஆங்கில ஹேஷ்டேக் ( #Thanks_PM_MODI ) ஒன்று டிரெண்டாகி வருகிறது.

    எதற்காக நெட்டிசன்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அதை செய்து வருகிறார்கள் என்று நாமும் கொஞ்சம் போய் எட்டிப் பார்த்தோம்.

    மேட்டர் இது தான். தாங்கள் பெரிதும் எதிர்பார்த்த பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு புத்துயிர் ஊட்டும் வகையிலான முடிவுகளை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. இதற்குத்தான் பிரதமருக்கு நன்றி.

    அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் கிராமப்புறங்களிலும் நெட்வொர்க் அமைத்து, சாமானியர்களுக்கும் தொலைத் தொடர்பை குறைந்த கட்டணத்தில் கொண்டு சேர்த்தது.

    இனிதான் அதிரடி.. பிஎஸ்என்எல் 'இஸ் பேக்'.. 4ஜியிலும் குதிக்கிறது.. எம்டிஎன்எல்லுடன் இணைப்புஇனிதான் அதிரடி.. பிஎஸ்என்எல் 'இஸ் பேக்'.. 4ஜியிலும் குதிக்கிறது.. எம்டிஎன்எல்லுடன் இணைப்பு

    பிஎஸ்என்எல் தேவை

    பிஎஸ்என்எல் தேவை

    ஆனால் சமீபகாலமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது பிஎஸ்என்எல். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை திடீரென உயர்த்தின. அப்போதுதான் அரசுத்துறை நிறுவனத்தின் அருமை வாடிக்கையாளர்களுக்கு புரிய தொடங்கியது. எந்த ஒரு துறையிலும் தனியார் முற்றுரிமை பெற்றுவிட்டால், கடைசியில் மக்களுக்குத்தான் அது ஆபத்தாக முடியும் என்று உணர ஆரம்பித்தனர். எனவே பிஎஸ்என்எல் வேண்டும் என்ற பொருள்படும் வகையில் நேற்று டுவிட்டரில் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்தனர்.

    மோடிக்கு நன்றி

    மோடிக்கு நன்றி

    இந்த நிலையில்தான், நான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டது. எம்டிஎன்எல் நிறுவனத்துடன் பிஎஸ்என்எல் இணைப்பது, அதிக தொழிலாளர்களை பணியில் அமர்த்துவது, ஏற்கனவே உள்ள தொழிலாளர்களை விஆர்எஸ் வழங்கி அனுப்புவது, 4ஜி நெட்வொர்க் சேவையை துவங்குவது, பிஎஸ்என்எல் அமைப்புக்கான சொத்துக்களை அதிகரிப்பது போன்றவை இந்த முடிவுகளின் முக்கிய அம்சங்களாகும். இதற்காகத்தான் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ சில சுவாரசியமான டிவிட்டுகளை பார்க்கலாம்.

    இவ்வளவு நல்லவை

    வேலைவாய்ப்பு உருவாக்கம்
    தேசத்திற்கான சொத்துக்கள்
    உண்மையான 4ஜி வேக நெட்வொர்க்
    ஊழியர்களுக்கு கவர்ச்சிகரமான விஆர்எஸ் தொகுப்பு
    தடையற்ற இணைப்பிற்காக MTNL-BSNL இல் சேரவும்
    #MODI_withBSNL

    இவ்வாறு கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

    சிறந்த எதிர்காலம்

    எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல்லின் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான சிறந்த நடவடிக்கைக்கு பாஜக அரசுக்கு நன்றி. இவ்வாறு கூறியுள்ளார் இவர்.

    நேர்மறை

    பி.எஸ்.என்.எல் மறுசீரமைப்பு என்பது வரலாற்று சிறப்புள்ள முடிவு. சமநிலை மற்றும் நேர்மறையான அணுகுமுறையை பி.எஸ்.என்.எல் நோக்கி அரசால் காட்டப்படுகிறது.

    English summary
    Twitter trends #Thanks_PM_MODI hashtag after cabinet decides to give boost to BSNL.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X