பொறாமை புடிச்சவனுங்க.. வாங்கி 2 நாள்தான் ஆகுது.. இப்படி தீயில் கருக வெச்சிட்டானுங்களே!
2 புதிய பைக்குகள் தீயில் எரிந்து கருகியது குறித்து விசாரணை நடக்கிறது
சென்னை: "பொறாமை புடிச்சவனுங்க.. வாங்கி 2 நாள்தான் ஆகுது.. அதுக்குள்ள இப்படி தீயை வெச்சு கருக வெச்சிட்டானுங்களே" என்று பம்மல் பகுதி மக்கள் பொருமுகிறார்கள்.
பல்லாவரத்தை அடுத்த பம்மல் மூவேந்தர் நகர் 2-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் கண்ணன். சாய்பாபா என்ற டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சீனிவாசன், சதீஷ் என்ற 2 மகன்கள்.

2 நாளைக்கு முன்னாடி, இவர்கள் ஒரு பைக் வாங்கினார்கள். அது ஜாவா 42 என்ற ஃபேமஸ் ஆன பைக். இந்நிலையில், இன்று காலை தூங்கி எழுந்து வெளியே வந்து பார்த்தபோது, அந்த பைக் கருகி கிடந்தது. நேற்றிரவு யாரோ இந்த பைக்குக்கு தீயை வைத்துள்ளார்கள்.

அதன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புல்லட் 350 வண்டியும் இந்த தீயில் எரிந்து கருகியது. காலையில் பார்த்தபோது இரண்டு வண்டிகளிலும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. இந்த தீயை அணைக்க முயற்சித்தும் முடியாததால், தாம்பரம் சானடோரியம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பிறகே அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும் ரெண்டு வண்டியுமே முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது. இந்த வேலையை யார் செய்தது என தெரியவில்லை.

இரண்டு பைக்கையும் பார்த்து, பொறாமையால் அந்த பகுதியில் உள்ளவர்கள் செய்தார்களா, அல்லது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வண்டி பற்றிக் கொண்டு எரிந்ததா என தெரியவில்லை. இதுகுறித்து பம்மல் சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications