ஜஸ்ட் மிஸ்.. ஒரே தண்டவாளத்தில் வந்த 2 மின்சார ரயில்கள்.. பல்லாவரத்தில் அலறிய பயணிகள்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை பல்லாவரம் அருகே ஒரே தண்டவாளத்தில் 2 மின்சார ரயில்கள் வந்து நின்றதால், பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலின் 6வது பெட்டியில் புகை வந்ததால், அந்த ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதன்பின் கடற்கரை நோக்கி மற்றொரு மின்சார ரயில் அதே வழித்தடத்தில் வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ரயில்வே நிர்வாகிகள் உடனடியாக ஓட்டுநருக்கு தகவல் அளித்து பெரும் அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தி இருக்கின்றனர்.
சென்னையில் வசிக்கும் மக்களின் முக்கிய பொது போக்குவரத்தாக இருப்பது மின்சார ரயில் தான். நகரின் அனைத்து முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரயில் சேவை இயங்கி வருகிறது. சென்னை கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு, தாம்பரம் - கடற்கரை என்று பல்வேறு வழித்தடங்களில் ஒவ்வொரு நாளும் 500க்கும் அதிகமாக மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

அதிகபட்சமாக ரூ.10ல் சென்னையின் ஒரு பகுதியில் இருந்து எங்கு வேண்டுமோ அங்கு மின்சார ரயில் மூலமாக செல்ல முடியும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர், தொழில் செய்வோர், ஐடி நிறுவன ஊழியர்கள் என்று பல்வேறு தரப்பினரும் மின்சார ரயில் சேவையை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஒருநாளில் லட்சக்கணக்கானோர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை ஒரே தண்டவாளத்தில் 2 மின்சார ரயில்கள் வந்தது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு மின்சார ரயில் வந்து கொண்டிருந்து இருக்கிறது. அப்போது அந்த ரயிலின் 6வது பெட்டியில் இருந்து புகை வந்ததால், பல்லாவரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
அந்த நேரத்தில் கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலும் அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. நல்வாய்ப்பாக உடனடியாக கவனித்த ரயில்வே அதிகாரிகள், ரயில் ஓட்டுநருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன்பின் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக மிகப்பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அதே வழித்தடத்தில் இயக்கப்பட்ட அத்தனை ரயில்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். நீண்ட தாமதத்திற்கு பின்னரே மின்சார ரயில் சேவை தொடங்கியது. இதனால் பயணிகள் பலரும் ரயில்வே நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications