'வேக்சின் இல்லை..' அமைச்சர் மா.சு கூறிய சில மணி நேரத்தில்.. 2 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் வருகை
சென்னை: தமிழ்நாட்டில் வேக்சின்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியிருந்த நிலையில், இன்று மாலை 2 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை கடந்த மாதம் ஏற்பட்டது. இதனால் தினசரி வைரஸ் பாதிப்பு அதிகபட்சமாக 35 ஆயிரம் வரை கூட சென்றது.
அதன் பின்னரே மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

வேக்சின் பணிகள்
தமிழ்நாட்டில் ஊரடங்கிற்குப் பிறகு வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து வேக்சின் போடும் பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் வேக்சின் மீதான நம்பிக்கை அதிகரித்து வருவதால் பலரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், தமிழ்நாட்டில் வேக்சின்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

அமைச்சர் மா சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் இதுவரை 1.40 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளதாகவும் அதேநேரம் கையிருப்பாக 2 லட்சம் தடுப்பூசிகளே மட்டுமே இருப்பதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று காலை தெரிவித்திருந்தார். இதன் காரணமாகச் சென்னையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Recommended Video

2 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள்
இந்தச் சூழலில் இன்று மாலை 2 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் சென்னைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இன்று மாலை சென்னை வரும் தடுப்பூசிகள் உடனடியாக மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணிகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற உதவும்.

ஒரு நாளைக்குக்கூட போதாது
ஆனால், தமிழ்நாட்டில் தினசரி 3 முதல் 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதால், தற்போது அனுப்பப்பட்டுள்ள வேக்சின்கள் ஒரு நாளைக்குக்கூட போதாது எனச் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். அதேநேரம் தமிழ்நாட்டிற்கு அடுத்த தடுப்பூசி தொகுப்பு வரும் 30ஆம் தேதி வந்துவிடும் என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் மிகப் பெரியளவில் பாதிக்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications