Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நாளில் தமிழக அரசுக்கு எதிரான அமலாக்கத்துறையின் 2 பெரிய வழக்குகள்.. அடுத்தடுத்து பறந்த நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறையில் அதிகாரிகள் நியமனத்துக்காக ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு மீது தமிழ்நாடு அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறுகையில், " தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2024 - 2026 ஆண்டுகளில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நகர் திட்டமிடல் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என 2,538 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

two major cases against the Tamil Nadu government heard in the High Court on the same day

இந்த நியமனத்தின்போது ஒவ்வொரு பணியிடத்துக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டு பணி நியமனம் நடைபெற்றதாகவும், ரூ.634 அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடுகளில் சமீபத்தில் அமலாக்கத் துறையினர் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தினர்.

அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனங்களில் ரூ.634 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறும் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை 27.10.2025-ல் கடிதம் அனுப்பியுள்ளது.

இருப்பினும் இதுவரை டிஜிபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமலாக்கத் துறை கடிதத்தின் பேரில் உள்துறை செயலாளரிடம் ஒப்புதல் பெற்று வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் "இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது 'நீதிபதிகள், நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கடிதம் யார் எழுதியது? கடிதம் யாருக்கு எழுதியது? நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கடிதத்தில் இறுதியில் யாருடைய கையெழுத்தும் இல்லையே? இந்த ரகசிய அறிக்கை எப்படி மனுதாருக்கு கிடைத்தது?' எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, 'இந்த வழக்கின் மனுதாரர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி. இவர் மீது 27 குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 3 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவருக்கு அமலாக்கத் துறை அரசுக்கு அனுப்பிய ரகசிய கடிதம் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும், சரித்திரப் பதிவேடு குற்றவாளி தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது.

இதே கோரிக்கையுடன் சென்னையில் தலைமை நீதிபதி அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவிற்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவையும் சென்னை முதன்மை அமர்வுக்கு மாற்ற வேண்டும். ரிட் மனு தாக்கல் செய்து வழக்குப் பதிவு செய்யுமாறு கோரிக்கை வைக்க முடியாது. இதனால் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல' என்றார். பின்னர் நீதிபதிகள், இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

தொடர்ந்து ஆதிநாராயணன் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கிற்கு தமிழ்நாடு உள்துறை செயலாளர், அமலாக்கத்துறை இயக்குனர், டி.ஜி.பி. ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

அதேபோன்று தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய டி.ஜி.பி.க்கு உத்தரவிடக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவும் நேற்று விசாரணைக்கு வந்தது.இந்த மனு மீதான விசாரணையை ஜனவரி 23-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+