சிலைக் கடத்தல் விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு.. ஐகோர்ட்டில் பொன்.மாணிக்கவேல் பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலைக் கடத்தல் விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றத்தால் காவல்துறை ஐஜி பொன்.மாணிக்கவேல் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் அண்மையில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உரிய வசதிகளை செய்து தர தமிழக அரசு மறுப்பதாக புகார் கூறியிருந்தார்.

two ministers involved Idol sumggling, says Idol Wing IG Pon Manickavel at HC

இதனிடையே இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் , சிலைக் கடத்தல் விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார்.

மேலும் டிஎஸ்பி காதர் பாட்ஷாவின் மனுவில் எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பொன்.மாணிக்கவேல் தரப்பு புகார் குறித்து ஆதாரத்துடன் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+