பிறந்து 2 மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு இருதய பாதிப்பு.. உயிரை காப்பாற்ற உதவுங்கள்.. ப்ளீஸ்
சென்னை: சென்னையில் பிறந்து 2 மாதமே ஆன சதன்யா ஸ்ரீ என்ற பச்சிளம் குழந்தைக்கு தீவிர இருதய நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குழுந்தையின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை கட்டாயம் என மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். குழந்தையின் பெற்றோரால் சிகிச்சைக்கான தொகையை ஏற்பாடு செய்ய முடியாததால், உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த தொகயை கொடுத்து உதவி செய்யுங்கள். நீங்கள் செய்யும் சிறு உதவி கூட குழந்தை சதன்யா ஸ்ரீயின் உயிரை காப்பாற்ற உதவும்.
சென்னையில் வசித்து வருபவர் விக்னேஷ் ராஜ். இவரது மனைவி பூமிகா. இளம் தம்பதியான இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சதன்யா ஸ்ரீ என பெயர் வைத்தனர். தொடர்ந்து குழந்தை ஆரோக்கியமாக இருந்தது.

தங்கள் மகள் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று எல்லா பெற்றோரை போல கனவுடன் வளர்த்து வந்தனர். ஆனால் கடந்த மாதம் குழந்தை சதன்யா ஸ்ரீயின் உடல்நிலை சரியில்லாததை பெற்றோர் உணர்ந்தனர். இதையடுத்து உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் இருதயத்தில் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சென்னை மியாட் மருத்துவமனை நடத்தும் இலவச மருத்துவ பரிசோதனைக்கு குழந்தையை அழைத்து செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு சிக்கலான இருதய நாள பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

MIOT மருத்துவமனையில் நடைபெற்ற விரிவான பரிசோதனைக்குப் பிறகு, சதன்யா ஸ்ரீக்கு பிறவி இருதய நோய், பெரிய திறந்த தமனி நாளம் (Large Patent Ductus Arteriosus - PDA) இருப்பது கண்டறியப்பட்டது. பிறப்பிற்குப் பின்னரும் திறந்திருக்கும் இரத்தக் குழாய், பிஞ்சு குழந்தையின் இதயத்தை கடினமாகச் செயல்பட வைக்கிறது.
இதனை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்வது கட்டாயம் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதற்கு தோராயமாக ரூ. 1,80,000 தேவைப்படுகிறது. ஆனால் சதன்யா ஸ்ரீயின் தந்தை விக்னேஷ் ராஜ், ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார். இவரது மாத வருமானம் 15,000 மட்டுமே.

குடும்பத்தின் ஒரே வருமானம் தான் இது என்பதால், இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மாத சம்பளத்தை வைத்து அவரது குடும்ப செலவுகளை சமாளிக்கவே அவரால் முடியவில்லை. ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் போதெல்லாம் சதன்யா ஸ்ரீயின் உயிருக்கு ஆபத்து மேலும் அதிகரித்து வருகிறது.
விரைந்து அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்பதால், குழந்தையின் உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். பெரிய தொகை என்றெல்லாம் இல்லை. உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த தொகயை கொடுத்து உதவி செய்யுங்கள். நீங்கள் செய்யும் சிறு உதவி கூட 2 மாத குழந்தை சதன்யா ஸ்ரீயின் உயிரை காப்பாற்ற உதவும்.












Click it and Unblock the Notifications