அபார்ட்மென்ட்டுக்குள் மசாஜ்.. எப்ப பார்த்தாலும் "கூட்டம்".. அதிரடியாக புகுந்த போலீஸ்.. சென்னையில்!
விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் 6 பேர் மீட்கப்பட்டனர்
சென்னை: சென்னையில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் மசாஜ் சென்டர் நடத்துவதாக கேள்விப்பட்டு, போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.. அப்போதுதான் அந்த இளம் பெண்களை அங்கு கண்டு அதிர்ந்தனர்!
முன்பெல்லாம் மசாஜ் சென்டர்கள் என்றாலே எங்கேயாவது ஓரிரு இடத்தில் நடத்தப்பட்டு வந்தது.. அதுவும் தகுதி வாய்ந்த நபர்களை வைத்து அல்லது மசாஜ் நன்றாக செய்யக்கூடிய அனுபவம் உள்ள நபர்களை வைத்து மசாஜ் செய்து வந்தனர்..

அப்படியே மசாஜ் செய்தாலும், அதற்கு முன் கூட்டியே அனுமதியை வாங்க வேண்டும்.. நிறைய கஸ்டமர்கள் வருவதால், இப்படி ஒரு விதி இருந்தது. ஆனால், இது அப்படியே இப்போது தலைகீழாகிவிட்டது.. மசாஜ் சென்டர்கள் பெரும்பாலும் பாலியல் நடக்கும் இடமாக மாறி விட்டது..
அதேபோல, சில பியூட்டி பார்லர்களிலும் இப்படி மசாஜ் சென்டர்போல இயங்குவதும் உண்டு.. இந்த மசாஜ் சென்டர்களில் பெரும்பாலும் வேலை பார்ப்பது வெளிமாநில பெண்கள்.. கணவனால் கைவிடப்பட்டவர்கள்... அல்லது பணத்தாசை காட்டி இழுத்து வரப்பட்டவர்கள் ஆவர்.
இவர்களை தீவிரமாக கண்காணித்து போலீசார் அவ்வப்போது கைது செய்து கொண்டு வந்தாலும், அவர்களையும் மீறி ஆங்காங்கே மசாஜ் சென்டர்கள் நடந்து வருகின்றன.. சில மாதங்களாகவே லாக்டவுன் என்பதால், இந்த சென்டர்களில் வேலை பார்த்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் முறைகேடான மசாஜ் சென்டர்கள் தலைதூக்கி உள்ளன.
சென்னை அடையாறு எஸ்பிஐ காலனியில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. அதன்படி போலீசார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த வேல்முருகனை கைது செய்தனர்.. வேல்முருகனுக்கு 32 வயதாகிறது.. 4 பெண்களை வைத்து இந்த மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார்.. இதையடுத்து வேல்முருகனை கைது செய்த போலீசார் அந்த இளம் பெண்கள் 4 பேரையும் மீட்டனர்.
அதேபோல, அடையார் காந்தி நகர் பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வரவும், அங்கும் சென்று சோதனை நடத்தினர்.. பொன்னேரி தச்சூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்த 27 வயது வெங்கடேசன் இந்த சென்டரை நடத்தி கொண்டிருந்தார்.
அந்த அப்பார்ட்மென்ட்டில் ஒரு வீட்டையே வாடகைக்கு எடுத்து வைத்திருக்கிறார் வெங்கடேசன்.. 2 பெண்களையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். வெங்கடேசனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 இளம் பெண்கள் மீட்டனர். ஒரே நாளில் சென்னையில் அடுத்தடுத்து மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு 6 இளம்பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்!
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications